நடிகர் தனுஷ் நடிப்பில்,உருவாகியுள்ள ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது . இதையடுத்து தனுஷின் 50 வது படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது,
இப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கியும்,அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் வருகிறார்.கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி உள்ளிட்ட நட்த்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அஃதொப்பர் மாதத்திற்குள் நிறைவடைந்து விடும் என்கிறார்கள்.இதற்கிடையே அடுத்ததாக தனுஷின் 51 வது படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளார். இப்படத்தில் தனுஷின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்.
இவருடன் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2016-.ல் நாகார்ஜுனா கார்த்தியுடன் ‘தோழா’ படத்தில் நடித்து இருந்த நிலையில் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.













