கேரளாவின் விழிஞ்சம் கடற்கரைப் பகுதியில் சுமார் 300 கிலோ ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம் என்பவர் வரலட்சுமி உதவியாளராக இருந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்ததால் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்விவகாரம் தொடர்பாக நடிகை வரலட்சுமியை விசாரணைக்கு ஆஜராகுமாறு என்.ஐ.ஏ சம்மன் அனுப்பியதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து தற்போது நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,”எனக்கும் ஆதிலிங்கத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. என்னிடம் வேலை பார்த்த ஆதிலிங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே வேலையிலிருந்து நின்றுவிட்டார்.
ஆதிலிங்கம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் எனது தாயார் இடத்தில் மட்டுமே விசாரணை செய்தனர். விசாரணைக்கு என்னை யாரும் அழைக்கவில்லை’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்













