‘டிக்கிலோனா’ கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ‘புதியபடம், வடக்குப்பட்டி ராமசாமி’.இதில்,சந்தானம் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் தமிழ் வில்லனாக நடிக்கிறார். ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவிமரியா, மாறன், மொட்டை ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷூ, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் பெற்றுள்ளார்.என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மத்தியில் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக மாறியுள்ள சந்தானத்தின் நட்சத்திர வேல்யூவை கருத்தில் கொண்டு, டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் பெரிய அளவில் புரோமோஷனல் விஷயங்களைத் திட்டமிட்டுள்ளது. மேலும், சரியான வெளியீட்டுத் தேதியையும் விரைவில் அறிவிக்க உள்ளது.
ஷான் ரோல்டனின் இசையமைப்பிலும், தீபக்கின் ஒளிப்பதிவிலும், சிவ நந்தீஸ்வரனின் படத்தொகுப்பிலும் இந்தப் படம் உருவாகி வருகிறது.’வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தை ‘டிக்கிலோனா’ புகழ் கார்த்திக் யோகி இயக்கி இருக்க, டி.ஜி.விஸ்வபிரசாத் தயாரிப்பில், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரித்துள்ளார்.













