சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர்
இப்படம் முதல் வார முடிவில் உலகம் முழுவதும் சுமார் ரூ.375.40 கோடியை வசூல் செய்தது. இதையடுத்து, இரண்டாம் வார முடிவில் படம் 525 கோடியை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில்,இப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிக்கு BMW X7 காரை பரிசாக வழங்கி இருந்தார். BMW X7 மாடல் காரின் விலை ரூ.1.25 கோடியாகும். மேலும் இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப்குமாருக்கு காசோலையும், புத்தம் புதிய போர்ஷே காரையும் பரிசாக கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.













