தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் சிரஞ்சீவி நடித்த திரைப்படங்கள் சமீப காலமாக தோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’சைர நரசிம்மரெட்டி’, ‘ஆச்சார்யா’ ’காட்பாதர்’ ’வால்டர் வீரய்யா’ ’போலோ சங்கர்’ ஆகிய படங்கள் வசூலில் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை என்ற குற்றசாட்டு அப்படங்களின் விநியோகஸ்தர்களால் முன் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கும் ’மெகா 157’ என்ற படத்தின் இயக்குனர் வசிஷ்டாகூறுகையில்,” இனிமேல் சிரஞ்சீவி முதிர்ச்சியான கேரக்டர்களில் மட்டும் நடிப்பார் ,கமல்ஹாசன் ’விக்ரம்’ படத்திலும், ரஜினிகாந்த் ’ஜெயிலர்’ படத்திலும் நடித்தது போல் படங்களில் ரொமான்ஸ் இல்லாமல், வயதுக்கேற்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும்,
கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து திரைப்படங்களை தேர்வு செய்ய இருப்பதாகவும்தெரிவித்த அவர்,, ’மெகா 157’ படத்தில் சிரஞ்சீவி வயதான கதாபாத்திரத்தில் ,ரொமான்ஸ் இல்லாமல் கதை மற்றும் ஆக்சனுக்கு மட்டும் முக்கியத்துவம் தரப்பட உள்ளது. இந்த படத்தின் மூலம் இன்றைய தலைமுறை இளைஞர்கள் சிரஞ்சீவியை முற்றிலும் வேறு தோற்றத்தில் பார்ப்பார்கள் என்கிறார்.
சிரஞ்சீவியின் இந்த அதிரடி முடிவுக்கு காரணம் முன்னதாக ஜெயிலர் படக்கதையை இயக்குனர் நெல்சன் சிரஞ்சீவியிடம் தான் கூறினாராம். ஆனால்,சிரஞ்சீவி, இதில் எனக்கு பாடல் மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் எதுவும் இல்லை என மறுத்து விட,அதன் பிறகு இக்கதையில் ரஜினி நடிக்க, படம் பெரிய ஹிட்,இதையடுத்தே கமல்,ரஜினி பாணிக்கு தானும் மாறி விட முடிவு செய்தார் என்கிறார்கள்.













