பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வரும் நிலையில், தற்போது இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு காரணம் இந்த போஸ்டரில் உடல் முழுவதும் சேறும் சகதியுமாக தோன்றும் நாயகன் அருண் விஜய், ஒரு கையில் கடவுள் மறுப்பு கொள்கை உடைய பெரியார் சிலையையும் இன்னொரு கையில் கடவுளின் அடையாளமாக காணப்படும் விநாயகர் சிலையையும் வைத்திருப்பது தான்
ரசிகர்கள் மத்தியில்,இதன் மூலம் இயக்குனர் பாலா என்ன சொல்ல வருகிறார் என்ற எதிர்பார்ப்பையும், ஆச்சரியத்தையும் ரசிகர்கள் மத்தியில்,ஏற்படுத்தி உள்ளது.இப்படத்தில் மீனவராக அருண் விஜய் நடித்துள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் மிகவும் மிரட்டலாக அமைந்துள்ளது. இந்தப் போஸ்டரை நடிகர் அருண் விஜய்யும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வரும் இப்படத்தின் ஒளிப்பதிவை பாலசுப்பிரமணியம் மேற்கொள்ள,பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்து வருகிறது.
முன்னதாக இந்தப் படத்தில் நடிகர் சூர்யா இணைந்திருந்த நிலையில், அவர் கதையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இடையிலேயே படத்திலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது













