1969 இல் முதன் முதலில் வழங்கப்பட்ட இந்த விருது இந்திய சினிமாவுக்கு தாதாசாகேப் பால்கேயின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது
.தாதாசாகேப் பால்கே விருது என்பது சினிமா துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதாகும். இது ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது .
“இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சிறந்த பங்களிப்பிற்காக திரையுலக பிரபலங்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ஸ்வர்ண கமல் (தங்க தாமரை) பதக்கம் , ஒரு சால்வை மற்றும் ரூ.1கோடி ரொக்கப் பரிசு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இந்த விருதை முதலில் பெற்றவர் நடிகை தேவிகா ராணி , இவர் 17 வது தேசிய திரைப்பட விருதுகளில் கௌரவிக்கப்பட்டார் . நடிகர் பிருத்விராஜ் கபூர், வினோத் கண்ணா ,பிஎன் ரெட்டி, பி. நாகி ரெட்டி ,ராஜ் கபூர் ,சஷி கபூர், லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, பிஆர் சோப்ரா , யாஷ் சோப்ரா நடிகை ஆஷா பரேக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது 2023-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது பழம்பெரும் நடிகை வகிதா ரஹ்மானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகை வகிதா ரஹ்மான் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளையும் ஏற்கனவே பெற்றுள்ளார்
தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான . விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் அவருக்கு அம்மாவாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.நடிகை வஹீதா ரெஹ்மான் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் பாரம்பரிய இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவராவார். அவரது தந்தை மாவட்ட நீதிபதியாவார்.













