
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம்.
உண்மையில் நடந்த நிகழ்வு , படத்தின் அடிநாதமாக வைக்கப்பட்டிருக்கிறது . சுவரில் கன்னம் வைத்து கடையின் மொத்த நகையும் களவாடப்பட்ட அந்த சம்பவம் தமிழகத்தில் பெரிதும் பேசப்பட்டது. இந்த ‘கத’யை தனது சத்திக்கு தகுந்தவாறு இழுத்திருக்கிறார் இயக்குநர் ராஜு முருகன்.
கோவையில் நடந்த அந்த கொள்ளையை நடத்தியவன் ஜப்பான் என்கிற பிரபல கொள்ளையன் என போலீஸ் முடிவு செய்து அவனை தேடுகிறது. ஆனால் உண்மையான கன்னக்கோல் திருடன் ஜப்பான் கிடையாது. ,இவனது கவனம் முழுவதும் திரைத் துறையில்தான் இருந்து வருகிறது. அப்படியானால் அசல் திருடன் யார் ?
வெண் திரையில் காண்க. ………………………………………….!
இந்த கதையில் தன்னை புதுமையான ,வேறு கார்த்தியாக மோல்டு பண்ணிக் கொண்டிருக்கிறார் .குறிப்பாக வசன உச்சரிப்பு . அடுத்து தோற்றம் . மனோபாவம் . இப்படி ஜப்பான் கேரக்டராக மாறியிருக்கிறார்.இவரது துணையாள் ,அடியாள் என வாகை சந்திர சேகர் . நிறைவு.! கர்த்தரை நினைப்பது செம.!
நாயகியாக நடித்திருக்கிறார் அனு இம்மானுவேல். பவுசுக்காரி .
கேமரா மேன் விஜய்மில்டன், சுனில் ஆகியோரின் நடிப்பு படத்துக்குப் பலம். கார்ப்பயணம் அனுபவம் அதிகம்.! விஜய்மில்டன் நடிகராகவும் வென்றிருக்கிறார்.
ஜித்தன்ரமேஷ்.டி வி புரோகிராம் எதுவும் இல்ல போலிருக்கு.!
ஜி.வி.பிரகாஷ் பின்னணி இசையில் கவனம் ஈர்த்திருக்கிறார்.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு .. அண்ணே நீங்க பலே ஆளுண்ணே !
எழுதி இயக்கியிருப்பவர் ராஜுமுருகன்.கிடைத்திருந்த அரிய வாய்ப்பினை சரியாக பயன் படுத்தியிருக்கிறாரா ?
கார்த்திக்கின் தோளில் ஏற்றப்பட்ட பெருஞ்சுமையை ஜப்பான் சமாளித்திருக்கிறார் . ஆனால் எழுத்தாளர் ராஜு முருகன் தொலைந்து போய் விட்டார் .
–தேவிமணி












