உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தக்லைஃப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது தொழில்நுட்ப பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.
இந்தியா முழுவதும் வரும் ஜூன் 5 ம் தேதி வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ’நாயகன்’ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின்னர், கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் மீண்டும் இணைந்துள்ள ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க , திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர் உள்ளிட்ட பலரும் இதில் நடித்துள்ளனர்.இந்நிலையில் இப்படம் வெளியாக, இன்னும் 75 நாட்கள் மட்டுமே என்ற புதிய போஸ்டரில் கமல்ஹாசனும் சிலம்பரசன் டி .ஆர்.-தோன்றும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது!
இந்த போஸ்டரை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்













