பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி(வயது 67) இந்த தம்பதிக்கு செல்வி மற்றும் சுமித்ரா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சாந்தி உடல்நிலை குறைவால் அவதியுற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார்.அவரது உடல் தேனாம் பேட்டையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் சத்யராஜ், செந்தில் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் சாந்தியின் உடல் தகனம் நாளை நண்பகல் மின் மயானத்தில் நடைபெரா உள்ளது.













