காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான ‘தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்’ பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் வகையில்,பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் இராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் இந்தியா நடத்தியுள்ளது. இந்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பலரும் பாராட்டும், வரவேற்பும் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இந்திய ராணுவ நடவடிக்கையை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “பெருமைமிக்க இந்தியா தனது ஆயுதப் படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது. கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்களால் பிரிக்கப்படாத ஒரு வலிமையான தேசத்தின் உறுதியான பதில் இது. இந்திய அரசு எடுத்த தீர்க்கமான மற்றும் மூலோபாய ராணுவ நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். ஜெய் ஹிந்த்”இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.













