
தமிழில் கடந்த 2013ம் ஆண்டு யாருடா மகேஷ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் பிரபல தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன். தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது லைகா தயாரிப்பில், நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் புதிய படத்திலும் இவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், சந்தீப் கிஷன். தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகி வரும்இன்னும் பெயரிடப்படாத படத்தின் மேக்கிங் வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டு சந்தீப் கிஷனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.













