கடந்த ஏப்ரல் 22-ம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலடி தரும் வகையில்,பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் இராணுவ நடவடிக்கை மூலம் தாக்குதல் இந்தியா நடத்தியுள்ளது.இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது அதிரடியான கருத்தை பதிவு செய்துள்ளார்.அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், “போராளியின் சண்டை தொடங்கியது. பணி நிறைவேறும் வரை இனி ஓய்வில்லை. ஒட்டுமொத்த தேசமும் உங்களுடன் உள்ளது. ஜெய்ஹிந்த்” என குறிப்பிட்டுள்ளார்.இதில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சகத்தை அவர் ‘டேக்’ செய்துள்ளார்.
இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கையை அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் பலர் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.













