ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் திடீரென இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலுக்கு பிரபல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உட்பட பலரும் இந்திய ராணுவத்திற்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், தனது சமூக வலைதள பக்கத்தில் “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்” என பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.













