
‘கங்குவா’ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், ‘கருப்பு’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நடித்துள்ளார் . இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார் . இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில்,தற்போது நடிகர் சூர்யாவின் 50ஆவது பிறந்த நாளில் கருப்பு படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசரில், வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யா, சமூகத்தில் நடக்கும் கெட்டவைகளை தட்டி கேட்கும் படியான காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பதையும் இந்த டீசர் சுட்டிக்காட்டும் நிலையில், இணையத்தில் வைரலாகி வருகிறது.













