
தமிழில் கடந்த 1981-ல் பாக்யராஜ் இயக்கி நடித்த ‘அந்த 7 நாட்கள்’ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது இந்நிலையில் அதே (‘அந்த 7 நாட்கள்’) தலைப்பில் காதல் -திரில்லர் ஜானரில் புதியபடம் ஓன்று உருவாகி வருகிறது. இப்படத்தை ‘பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ்’ முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ளார் இப்படத்தில் அஜித்தேஜ் மற்றும் ஸ்ரீஸ்வேதா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இவர்களுடன் பாக்யராஜ், நமோ நாராயணன், சுபாஷினி கண்ணன், தலைவாசல் விஜய், ஏ.பி.ஜனகன், வாசு சீனிவாசன், ராகவன், சாய் கோபி, விதுஷ்ணவி, ஆதித்யா, கவிப்ரியா, ராம்ஜி, மோகனா, செம்புலி ஜெகன் உள்பட பலர் நடித்துள்ளனர் , எம். சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசையமைத்த இப்படத்தின் முதல் தனிப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது இப்படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் கூறுகையில்,, “நான் படம் தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தபோது ரசிகர்கள் இதற்கு முன்பு பார்த்திராத நல்ல கதைகள் மற்றும் நல்ல சினிமா அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான கதைகளை திரும்ப திரும்ப சொல்வதை விட புதுவிதமான கதைகளை சொல்ல வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறியுள்ளது. அந்தவகையில், தனித்துவமான கதைகள் தேடிக் கொண்டிருந்தபோதுதான் பல திருப்புமுனைகளைக் கொண்ட எம். சுந்தரின் கதை கேட்டேன். கதை கேட்டு முடித்ததும் இயக்குநர் கே. பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’ படத்தலைப்புதான் இந்தக் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். இதற்காக அவரிடம் அனுமதி கேட்டபோது உடனே ஒத்துக் கொண்டார். சென்னை மற்றும் கொடைக்கானல் போன்ற இடங்களை சுற்றிலும் 45 நாட்களில் இந்தக் கதை படமாக்கப்பட்டுள்ளது.இப்படத்தி ன் ஒளிப்பதிவை கோபிநாத் துரை கவனிக்க,சச்சின் சுந்தர் இசையமைத்து வருகிறார்.













