Saturday, July 11, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாக மாறிய ஷர்வானந்த் !

admin by admin
March 24, 2026
in News
419 5
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

You might also like

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

முன்னணி நட்சத்திர நடிகர் ஷர்வானந்த், டாக்டர் ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி நடிப்பில் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக, பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் “பைக்கர்”. இப்படத்தை அபிலாஷ் ரெட்டி இயக்கியுள்ளார். UV Creations தயாரிப்பில்,  விக்ரம் ரெட்டி வழங்க, வம்சி கிருஷ்ணா ரெட்டி மற்றும் பிரமோத் உப்பலபாட்டி தயாரித்துள்ளனர்.
இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும்  2026 ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில்  படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் தமிழ் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். 
இந்நிகழ்வினில் மோட்டார் சைக்கிள் டிரெய்னர் ரோஷிணி  பேசியதாவது.., 
இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தாலும், மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.நான் பெண்களுக்கு மோட்டார் சைக்கிள் பயிற்சி அளித்து வருவதால், இந்தப் படத்தின் உலகத்தை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது. ‘பைக்கர்’ உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதால், அது இன்னும் சிறப்பு பெற்றதாக தெரிந்தது. இந்தப் படம் இளைஞர்களுக்கும் பைக் ரேசிங் ஆர்வலர்களுக்கும் ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்திய சினிமாவில் மோட்டார் பைக் ரேசிங்கை மையமாகக் கொண்ட இப்படம் மிகவும் முக்கியமான முயற்சியாக தெரிகிறது. இந்த விளையாட்டை அதிகமான மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே இயக்குநரின் உண்மையான நோக்கம் என்பதை உணர முடிந்தது. டாக்டர் ராஜசேகர் அவர்களின் நடிப்பு ஒரு கடுமையான ஆனால் பாசமுள்ள தந்தையை நினைவுபடுத்தியது. நாயகன் ஷர்வானந்த் தனது கதாபாத்திரத்திற்கு முழுமையாக அர்ப்பணித்து, உண்மையான ரேஸராகவே மாறியிருக்கிறார். 
ஒளிப்பதிவாளர் மதி  பேசியதாவது..,
இந்தப் படக்குழுவுடன் இணைந்து பணியாற்றியது குடும்பத்தோடு சேர்ந்து வேலை செய்த அனுபவம் போல இருந்தது. ரேவதி, பிரபு உள்ளிட்ட பலருடன் முன்பே பணியாற்றியிருந்தாலும், இந்தப் படம் தனித்துவமான அனுபவத்தை அளித்தது. குறிப்பாக ரேஸ் காட்சிகளைப் படம் பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தாலும், அதை சிறப்பாக பதிவு செய்ய முழு முயற்சியும் எடுத்தோம். அபிஜித் உள்ளிட்ட குழுவினரின் ஒத்துழைப்புக்கு நன்றி. தொடர்ந்து ஒரு மாத காலம் நடைபெற்ற ரேஸ் படப்பிடிப்பு மிகப்பெரிய அனுபவமாக அமைந்தது. இது எனது திரைப்பயணத்தில் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். இந்தப் படத்தில் குழுவின் முழு அர்ப்பணிப்புதான் இப்படத்தை சிறப்பாக்கியது. படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசியதாவது..,
இந்தப் படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு வம்சி சாருக்கு முதலில் நன்றி. அபிலாஷை தமக்கு அறிமுகப்படுத்தியது அவர்தான். அபிலாஷுடன் முதல் சந்திப்பிலேயே நல்ல உணர்வு ஏற்பட்டது. கதையைக் கேட்டவுடனேயே மிகவும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இப்படிப்பட்ட வேகமும் ஆழமும் கொண்ட கதைகள் எப்போதும் எனக்கு மிகவும் பிடிக்கும். ஷர்வானந்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளித்தது. கதை 1990களில் இருந்து 2000கள் வரை தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு நகர்வதால், அதன் சூழல் எனக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவில் பலரும் தமிழில் பேசும் சூழல் இருந்தது பணியில் மேலும் உதவியாக அமைந்தது. பைக் ரேசிங் உலகின் ஒலி வேறுபாடுகளை உணர்த்துவதில் சவுண்ட் டிசைன் மிக முக்கிய பங்காற்றியது.
இந்தப் படம் இந்திய அளவைக் கடந்து சர்வதேச அளவிலும் ரசிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தை முதல் நாளிலேயே பார்த்து ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 
இயக்குநர் அபிலாஷ் ரெட்டி பேசியதாவது.., 
இந்த மேடையில் மூத்த கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முன் பேசுவது எனக்கு பெருமையாகவும் பதட்டமாகவும் இருக்கிறது. ‘பைக்கர்’ படம் வெறும் ரேஸ் பற்றிய கதை மட்டும் அல்ல, அதில் ஆழமான மனித உணர்வுகளும் இடம்பெற்றுள்ளன.
அதனால்தான் இந்தப் படத்தை தமிழிலும் வெளியிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு தமிழ் சரியாகப் பேச வராவிட்டாலும், இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ராஜீவன் சார், மதி சார், யுவராஜ் சார், ஜிப்ரான் சார் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் தமிழ் கற்க வேண்டும் என்ற ஆசை அதிகரிக்கிறது.
அடுத்த முறை வரும்போது இன்னும் நன்றாக தமிழில் பேச வேண்டும் என்பதையும் விரும்புகிறேன். எதிர்காலத்தில் ஒரு தமிழ் படம் இயக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஷர்வானந்த் சார், ராஜசேகர் சார், மாளவிகா மேடம் உள்ளிட்ட நடிகர்கள் இல்லாமல் இந்தப் படம் சாத்தியமாகியிருக்காது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக உயிர்ப்பித்துள்ளனர். இந்தப் படம் அனைவரின் கூட்டு உழைப்பால் உருவான ஒன்று. ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் இந்தப் படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி. 
நடிகர் நிரூப் பேசியதாவது..,
இந்தப் படத்தில் நடிக்க என்னை அணுகியபோது, நான் இரண்டு படங்கள் மட்டுமே நடித்திருந்தேன். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. ஆடிஷன் மூலம் இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு  நன்றி. என் கதாபாத்திரம் பற்றி இப்போது அதிகமாக சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் அது ரசிகர்களுக்கான சஸ்பென்ஸாக இருக்க வேண்டும். ஆனால் இந்தப் படம் எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை மட்டும் அல்ல, நிறைய நல்ல நண்பர்களையும் கொடுத்தது. ஷர்வா அண்ணாவுடன் பணியாற்றியது மிக அழகான அனுபவமாக இருந்தது. ராஜசேகர் சார் மனிதராகவே மிகவும் அருமையானவர்; அவரிடமிருந்து இன்னும் பல விஷயங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மாளவிகா மேடமும் தனது கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். யுவராஜ் சார் இந்தப் படத்திற்கு கண்களால் ரசிக்க வேண்டிய அளவுக்கு அழகான காட்சிகளை கொடுத்திருக்கிறார். இந்தப் படம் திரையரங்கில் பார்த்தால்தான் அதன் முழு அனுபவமும் உணர முடியும். அபிலாஷ் சார் ஒரு அழகான உலகத்தை உருவாக்கியிருக்கிறார்; அதில் ஆச்சரியங்கள், அதிவேக ரேஸ்கள், உணர்வுகள் என அனைத்தும் இருக்கின்றன. தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழி ரசிகர்களும் ரசிக்கும் படமாக இது இருக்கும். நன்றி. 
நடிகை மாளவிகா பேசியதாவது.., 
சென்னைக்கு மீண்டும் வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்கே கிடைக்கும் அன்பும் வரவேற்பும் எப்போதும் நினைவில் நிற்கும். இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதேபோல், ஷர்வாவின் மற்ற படங்களுக்கு நீங்கள் கொடுத்த அன்பைப் போலவே ‘பைக்கர்’ படத்திற்கும் ஆதரவு தர வேண்டும் என்று விரும்புகிறேன். ஷர்வா பற்றி நான் அதிகமாகச் சொல்லத் தேவையில்லை, ஏனெனில் அவரை அனைவரும் ஏற்கனவே நன்றாக அறிவீர்கள். எங்கள் படத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே என் அன்பான வேண்டுகோள். நன்றி.
டாக்டர் ராஜசேகர் பேசியதாவது,
நடக்கும்போதே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது; ஹீரோ ஷர்வானந்த் கையைத் தந்து என்னை மேடைக்கு அழைத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இப்போதுதான் அது குணமாகி வருகிறது. இதற்கு முன்பும் சினிமா ஸ்டண்ட் செய்யும் போது இரு கால்களும் முறிந்த அனுபவம் எனக்கு உள்ளது. அதில் இடது கால் முதலில் முறிந்தது, அதுவும் ஒரு படப்பிடிப்பின் நடுவிலேயே நடந்தது. அந்த விபத்து மிகவும் பெரியதாக இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். அப்போது டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை. டிசம்பர் 8ஆம் தேதி வெளியான அந்தப் படத்தைப் பார்க்க நேராக சத்யம் திரையரங்கிற்கே வந்தேன். அந்தப் படம் வெளியாகும் முன்பே தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்த முறிவு நல்ல அறிகுறி, படம் பெரிய ஹிட் ஆகும் என்று பலர் சொன்னது நினைவுக்கு வந்தது. 
அதேபோல் இப்போதும் மீண்டும் முறிவுடன் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறேன் என்பதால், இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகிறது.  அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும்.  இந்தப் படம் ரசிகர்களின் அன்பில் பெரிய வெற்றியை அடையும் என்று மனமார நம்புகிறேன்.
நடிகர் ஷர்வானந்த் பேசியதாவது.., 
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன். என் படப் பயணத்தைப் பார்த்தால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய ஜானரில் அமைந்திருப்பதை காணலாம். அதேபோல், ‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.
இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மிகப் பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன். இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது; தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும். அனைவருக்கும் நன்றி. 
இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியாகவுள்ளது. 
admin

admin

Related Posts

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!
News

துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ ! ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்வெளியானது!!

by admin
July 11, 2026
ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!
News

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

by admin
July 10, 2026
ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!
News

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

by admin
July 10, 2026
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!
News

கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

by admin
July 10, 2026
இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.
News

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

by admin
July 9, 2026

Recent News

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்!

July 10, 2026
ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

ஜனநாயகன் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் ! 24 ம் தேதி வெளியாகிறது!

July 10, 2026
கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

கதாநாயகி பற்றிக் கவலை இல்லை கதை தான் முக்கியம் : நடிகர் யோகி பாபு பேச்சு!

July 10, 2026
இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

இளம் பெண்களின் கண்ணோட்டங்களை சித்தரிக்க்கும் ‘லவ் ஓ லவ்’! -இயக்குனர் செல்வராகவன்.

July 9, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?