பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி (வயது 94) வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 2 மணிக்கு காலமானார் அவரது உடல் தேனாம் பேட்டை செனடாப் சாலையில் இல்ல அவரது வீட்டில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்ப.ட்டுள்ளது. அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ,திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கமல் ரஜினி உள்ளிட்ட திரையுலக பிரபங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .
தமிழக முதல்வர் விஜய் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவருமான திருமதி சௌகார் ஜானகி அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற பல்வேறு மொழிப் படங்களில் நடித்து சாதனை படைத்துள்ளதோடு, பத்மஸ்ரீ விருது, கலைமாமணி விருது, நந்தி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள திருமதி சௌகார் ஜானகி அவர்களின் மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பாகும்.
திருமதி சௌகார் ஜானகி அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், திரைத்துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடிகளில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் முக ஸ் டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பழம்பெரும் நடிகை ‘பத்மஸ்ரீ’ திருமதி சௌகார் ஜானகி அம்மையார் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றபோதிலும், தமிழில் அறிமுகமான வளையாபதி திரைப்படத்திலயே பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளைச் சிறப்பாக உச்சரித்து, முத்தமிழறிஞர் கலைஞரின் கவனத்தை ஈர்த்தவர் சௌகார் ஜானகி. தலைவர் கலைஞரின் வசனத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனாக அறிமுகமான பராசக்தி திரைப்படம் வெளியான அதே சமயத்தில்தான் இத்திரைப்படமும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
380-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவரது நீண்ட திரைப்பயணத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல பெரும் நட்சத்திரங்களுடன் நடித்திருக்கிறார்.பேரறிஞர் அண்ணா, என்.டி.ஆர். எனப் பல முதலமைச்சர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றிருக்கிறார்.தலைவர் கலைஞர் மீது அளவுகடந்த மரியாதை கொண்டவராக இருந்து, எங்கள் குடும்பத்தினரோடும் நட்போடு பழகிய சிறந்த மனிதப் பண்பைக் கொண்டவராக சௌகார் ஜானகி திகழ்ந்தார்.புதிய பறவை, நீர்க்குமிழி, பாமா விஜயம், மோட்டார் சுந்தரம் பிள்ளை, எதிர்நீச்சல், இரு கோடுகள், தில்லுமுல்லு என நீண்டுகொண்டே போகும் அவர் நடித்த வெற்றிப்படங்களின் மூலமாக தென்னிந்திய மக்களின் மனதில் அவர் என்றும் புகழோடு வாழ்வார்.அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் எம் பி.
வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி.அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.












