Sunday, September 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

துல்கர் சல்மானின் ‘I’M GAME’… விமர்சனம்!

admin by admin
September 5, 2026
in Reviews
410 13
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

பான்-இந்திய நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், ‘ஆர்.டி.எக்ஸ்’ (RDX) பட புகழ் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், மருத்துவ, அமானுஷ்ய மர்மங்கள் நிறைந்த சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள ‘ஐஆம் கேம்’ (I’M GAME) திரைப்படம், தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு முற்றிலும் ஒரு புதிய காட்சி அனுபவத்தை அள்ளிக் கொடுத்துள்ளது.

இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான், காயடு லோஹர், மிஷ்கின், ஆண்டனி வர்கீஸ், சம்யுக்தா விஸ்வநாதன், வினய் ஃபோர்ட், கதிர், ஜெயசுதா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். நஹாஸ் ஹிதாயத் தனது சொந்தக் கதையில் உருவாக்கியுள்ள இப்படத்திற்கு சஜீர் பாபா, பிலால் மொய்து மற்றும் இஸ்மாயில் அபூபக்கர் ஆகியோர் இணைந்து விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளனர்.

You might also like

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ – விமர்சனம்!

‘இம்மார்டல்’ – கயாடு லோஹரின் கவர்ச்சி விருந்தும்… (விமர்சனம்.) பலவீனமான திரைக்கதையும்!

வக்கிரமில்லாத வயது வித்தியாசக் காதல்! (விமர்சனம்!) ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.

ஒரு பெரும் தொழிலதிபரின் ஒரே மகனாகப் பிறந்து, எவ்விதத் திறமையும் இல்லாததால் தொழிலில் முன்னேற முடியாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் துடிக்கும் ‘டேன் ஜான்’ என்ற பலவீனமான வாலிபராக துல்கர் சல்மானின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது. தவறான குணத்தால் தந்தையின் தொடர் இகழ்ச்சிக்கும் கோபத்திற்கும் ஆளாகும் அவர், எப்போதும் குடித்துவிட்டுச் சூதாட்டத்தில் ஈடுபட்டுப் பல கோடிகளை இழந்து கடுமையான கடனாளியாக மாறுகிறார். இதன் காரணமாகக் கடன் கொடுத்தவர்களுக்கும் அவருக்கும் இடையே ஏற்படும் ஒரு பயங்கரமான மோதலில், தப்பித்து ஓடும்போது எதிர்பாராத விதமாகத் தனது வலது கையை முற்றிலும் இழக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நடைபெறும் ஒரு மருத்துவ அறுவைசிகிச்சை மூலம், விபத்தில் இறந்த வேறொரு நபரின் கையை அவருக்குப் பொருத்துகிறார்கள். அந்தப் புதிய கையைச் சீராக இயங்க வைப்பதற்காக பிசியோதெரபிஸ்ட் ‘இஷா’ ஆக வரும் காயடு லோஹர் அவருக்கு உதவுகிறார், அந்த மருத்துவப் பயணத்தில் இருவருக்கும் இடையே காதலும் மலர்கிறது. ஆனால், கை முழுமையாகச் சரியாக இயங்க ஆரம்பிக்கும் தருணத்தில் ஒரு மாபெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. அந்தப் புதிய கை துல்கர் சல்மானின் மூளையின் கட்டளைக்கு இயங்க மறுப்பதுடன், அசாத்தியமான சக்தியுடன் விளங்கத் தொடங்குகிறது.

மேலும், அவரோட கட்டுப்பாட்டை மீறிச் சூதாட்ட உலகத்தின் டானாக வலம் வரும் மிஷ்கினைக் கொல்ல முயற்சிக்கிறது. கை, தனக்குக் கட்டுப்படாமல் வேறொரு அமானுஷ்ய சக்தியால் இயங்குவதைக் கண்டு நிலைகுலையும் துல்கர் சல்மான், அந்த கையின் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன என்பதைக் கண்டுபிடித்தாரா, டான் மிஷ்கினுக்கும் அந்த கைக்கும் என்ன தொடர்பு, இந்த விசித்திரப் பிடியில் இருந்து அவர் தப்பித்தாரா, இல்லையா? என்ற விறுவிறுப்பான திருப்பங்களின் பின்னணியிலேயே ‘ஐஆம் கேம்’ திரைப்படத்தின் எஞ்சிய திரைக்கதை சுவாரசியமாக அமைக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ‘டேன் ஜான்’ என்ற ஆழமான, சவாலான கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் தன்னுடைய அசாத்திய நடிப்புத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். காதலின் மென்மை, தொழில்முறைத் தோல்விகளால் ஏற்படும் ஏமாற்றம், சூதாட்டக் களத்தில் கோடிக்கணக்கான பணத்தை இழந்து தவிக்கும் மனக்கவலை மற்றும் எதிரிகளுடன் மோதும் உக்கிரமான ஆக்‌ஷன் காட்சிகள் என உணர்ச்சிகளின் பல்வேறு பரிமாணங்களையும், நேர்த்தியாக வெளிப்படுத்தி, ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளார். அவருக்கு ஜோடியாக வரும் காயடு லோஹர், வசீகரமான தோற்றத்தாலும் எதார்த்தமான நடிப்புத் திறனாலும் பார்வையாளர்களைக் கவர்ந்து, ஒட்டுமொத்தத் திரைக்கதையில் தந்து இருப்பை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.

கிரிக்கெட் வீரராக ‘விக்னேஷ் விக்கி தாஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்டனி வர்கீஸ் தமக்குக் கொடுக்கப்பட்ட எல்லையை உணர்ந்து ஓரளவிற்குத் திருப்திகரமான கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டப் போட்டிகளில் ஈடுபடும் அணியின் கேப்டன் கதாபாத்திரத்தில் வரும் நடிகர் கதிருக்கு, இப்படத்தில் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை என்றாலும், தனது பங்கை ஓரளவிற்குப் பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்குச் செய்து முடித்துள்ளார்.
சூதாட்டக் கிளப்பின் மாபெரும் மெகா டானாக வரும் இயக்குநர் மிஷ்கின், மிரட்டலான புதிய தோற்றம், அசாத்திய உடல்மொழி ஆகியவற்றின் மூலம் வில்லத்தனத்தைக் காட்டி ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். இவர்களுடன் இணைந்து விக்கி தாஸின் காதலியாக வரும் சம்யுக்தா விஸ்வநாதன், துல்கர் சல்மானின் தாயாக வரும் மூத்த நடிகை ஜெயசுதா, தந்தையாக வருபவர் மற்றும் நண்பனாக வரும் வினய் ஃபோர்ட் போன்ற பலரும் தங்களது கச்சிதமான நடிப்பின் மூலம் இப்படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்குத் தகுந்த பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் ஜிம்ஷி காலித் கேமரா கோணங்களால் ஒட்டுமொத்தத் திரைப்படத்தையும் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஒளிப்பதிவு செய்து காட்சி விருந்தளித்துள்ளார். அதேபோல், இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பாடல்களும், விறுவிறுப்பான பின்னணி இசையும் (BGM) படத்திற்கு ஒரு வியக்க வைக்கும் பிரம்மாண்டத்தையும், அடுத்தகட்ட சுவாரசியத்தையும் கூட்டியிருக்கிறது.

திரைக்கதையின் அமைப்பில், படத்தின் இரண்டாவது பாதியில் (Second Half) இருந்த சில தேவையற்ற நீளத்தைக் கொஞ்சம் கத்தரித்திருந்தால், படத்தின் ஒட்டுமொத்த வேகம் கூடியிருக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, ஆரம்பத்தில் மிகவும் கலகலப்பான ஒரு கமர்சியல் திரைப்படமாகத் தொடங்கி, அடுத்தடுத்து நகரும் காட்சிகளால் விறுவிறுப்பான ஒரு மெகா கிரைம் த்ரில்லராக (Crime Thriller) மாறியுள்ள இந்த ‘ஐஆம் கேம்’ திரைப்படம், ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும்.

admin

admin

Related Posts

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ – விமர்சனம்!
Reviews

‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’ – விமர்சனம்!

by admin
September 6, 2026
‘இம்மார்டல்’ – கயாடு லோஹரின் கவர்ச்சி விருந்தும்… (விமர்சனம்.) பலவீனமான திரைக்கதையும்!
Reviews

‘இம்மார்டல்’ – கயாடு லோஹரின் கவர்ச்சி விருந்தும்… (விமர்சனம்.) பலவீனமான திரைக்கதையும்!

by admin
September 5, 2026
வக்கிரமில்லாத வயது வித்தியாசக் காதல்! (விமர்சனம்!) ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.
Reviews

வக்கிரமில்லாத வயது வித்தியாசக் காதல்! (விமர்சனம்!) ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.

by admin
September 5, 2026
‘ஒன்ஸ்மோர்’ (விமர்சனம்.) நோ மோர்!!!
Reviews

‘ஒன்ஸ்மோர்’ (விமர்சனம்.) நோ மோர்!!!

by admin
August 30, 2026
காதல் குழப்பங்களும்… குடும்பக் கலாட்டாக்களும் (விமர்சனம்.) ‘ஹாய்’. புதிய ஃபீல்-குட் பயணம்?!
Reviews

காதல் குழப்பங்களும்… குடும்பக் கலாட்டாக்களும் (விமர்சனம்.) ‘ஹாய்’. புதிய ஃபீல்-குட் பயணம்?!

by admin
August 28, 2026

Recent News

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும்  ‘ஆபரேஷன் கங்கா’ !

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் ‘ஆபரேஷன் கங்கா’ !

September 5, 2026
விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி !

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி !

September 5, 2026
தரமான சம்பவத்துக்காக  காத்திருக்கும் ‘அரசன்’  ! -நடிகர் சிம்பு.

தரமான சம்பவத்துக்காக காத்திருக்கும் ‘அரசன்’ ! -நடிகர் சிம்பு.

September 5, 2026
‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!

‘கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு!

September 5, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?