தேசிய விருது பெற்ற இயக்குனர் விஷ்ணு மோகன் இயக்கத்தில், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பில் ‘ஆபரேஷன் கங்கா’ என்ற படம் உருவாகி வருகிறது. உக்ரைன் – ரஷ்யா போரின் போது இந்தியர்களை மீட்க அரசு நடத்திய உண்மைச் சம்பவ பின்னணியை மையமாகக் கொண்டு இந்த சர்வைவல் அதிரடித் திரைப்படம் உருவாகி வருகிறது.
பான் இந்திய படமாக உருவாகும் இப்படத்தில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடிக்கிறார்.தெலுங்கில் ‘மிஸ்டர் பச்சன்’, ‘லெனின்’ மற்றும் தமிழில் ‘காந்தா’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பாக்யஸ்ரீ போர்ஸ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இவர்களுடன் பாலிவுட் நடிகர் அர்ஜுன் ராம்பால், அதில் உசேன் மற்றும் நடிகர் இயக்குனர் ஆர். பார்த்திபன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு போலந்து, ஜார்ஜியா போன்ற சர்வதேச நாடுகளில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இப்படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது












