திசைக்கு ஒரு ஸ்டன்ட் மாஸ்டர், பீட்டர் ஹெயின்,கோச்சா, ரவி வர்மா,ராம் லட்சமன்,என பிடித்திருக்கிறார்கள். ‘ஜிம்’மில் ஊறிய உடம்பு அல்லு அர்ஜுனுக்கு! மோதுகிறவர்களை எல்லாம் நுட வைத்தியசாலைக்கு அனுப்பும் வகையில் சடக் மொடக் என சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கால்,கைகள் ஒடிகிறது. நடனத்திலும் ஃபை ட்டுகளிலும் புதியபாணி .தமிழ்நாட்டுக்கு புது அனுபவம். நம்ம ஆக்ஸன் ஹீரோக்களுக்கே கண்களில் பூச்சி பறக்கும் அளவுக்கு அல்லு அர்ஜுனின் நடிப்பில் வெறி! !மன்மதனும் அவனுடைய காதல் பாணங்களை அல்லுவுக்கு கொடுத்து விட்டான் போல!.பல்லு படாமல் அனு இமானுவேலின் மொத்த உடம்பும் வலி எடுக்கும் அளவுக்கு..யே யப்பா! …சார்ஜ் ஏத்தி அனுப்புகிறார்கள்.
முதல் பாதியில் எல்லாமே சஸ்பென்ஸ்தான் ! முரட்டு மிலிட்டரி அல்லுக்கு உச்ச பட்ச இலக்கு பார்டர் போகணும்! ஆனால் அதுக்கேற்ற மனப்பக்குவம் இல்லை என மேலிடம் அவரை சைக்கியாரிஸ்ட் திலகம் அர்ஜுனிடம் அனுப்புகிறது. இரண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்.ஆனால் இயக்குநர் வம்சி வைத்திருக்கிறார் பாருங்கள் இங்கு ஒரு சஸ்பென்ஸ்.
“உன் முதல் காதல் என்னாச்சு?” -இது அர்ஜுன்!
“இன்பாச்சுவேஷன்!” -இது அல்லுவின் சில்லு.
“அப்படினா?”
“அரிப்பு!வயசுக்கோளாறு! அது சரி நான் ஸ்மோக் பண்ணலாமா?”
“நோ!” -இப்படியாக போகிற உரையாடலில் அவர்களைப் பற்றிய சஸ்பென்ஸ் பற்றி யோசிக்க எங்கே இடம் இருக்கிறது.?ஆனால் வசனகர்த்தா விஜய் பாலாஜி நாசூக்காக சொல்லி விடுகிறார்.நேர்த்தி.
வில்லன் கர்லாவாக நம்ம சரத் குமார். கச்சிதமாக இருக்கிறது. பிற்பாதியில் வழக்கமான வில்லன் விளையாட்டு. சாய்குமார்,சாருஹாசன் காட்சிகள் சற்று நீளம்!
அல்லு சொல்லும் பார்டர் வேலையை பலான பார்டருடன் ஒப்பிட்டு நடத்தும் உரையாடல் செம ‘காம’டி! ஒளிப்பதிவு ராஜீவ் ரவிக்கு கட்டாயம் அவார்டு உண்டு.
கடைசி காட்சியில் அன்வரின் நாட்டுப்பற்றை காட்டுவதற்காக அத்தனை மெனக்கெட வேண்டுமா?
முற்பாதி எதிர்பாராத காட்சிகள் கவர்ச்சிகள்.கலைநயம்.
பிற்பாதியில் தேசியக் கடமை!