தமிழகத்தின் ஈடு இணையற்ற தமிழ்த் தலைவன் கலைஞர் மு.கருணாநிதி இன்று மாலை 6.10 மணி அளவில் இயற்கை எய்தினார்.
“வாழ்க்கையே ஒரு போராட்டம் என வர்ணிப்போர் உளர்.! எனக்கோ போராட்டமே வாழ்க்கையாகி விட்டது.
போர் வீரனுக்கு மகிழ்ச்சியே கிடையாதா? “உன்னை ஒருவன் இழித்துப் பேசினான் ” என்று தன் நண்பனிடம் ஒரு நண்பன் கூறினான். அதைக் கேட்ட அந்த நண்பன் வியப்புற்று “அப்படியா!இருக்காதே,என்னை அவன் இழித்துப்பேசி இருக்கமாட்டானே! நான் அவனுக்கு எந்த உதவியும் செய்யவில்லையே !பிறகு எப்படி அவன் என்னை ஏசி இருக்க முடியும்?” என்று கேட்டான். இந்த உரையாடல் துணுக்கில் இந்த உலகத்தின் படமே தெரிகிறதல்லவா? இத்தகைய உலகில்தான் நமது வாழ்க்கைப் பந்து உருளுகிறது.
அந்தப் பந்தை நாம்தான் உதைத்து விளையாடவேண்டும். யாரோ உதைப்பார்கள் என்று சோம்பலாயிருந்தால் அவர்கள் நம்மையும் சேர்த்து உதைப்பார்கள்.
கல்லிலும் முள்ளிலும் கட்டாந்தரையிலும் அடித்து அவுட் ஆகாமல் பந்து கோலுக்குள் நுழைத்திட வேண்டு.கோல் இல்லாமல் பந்தாடுவதில் மட்டும் திறமையைக் காட்டிப் பயனில்லை. வெற்றி,தோல்விகள் இயற்கைதான் எனினும் விடாமுயற்சியும் கொள்கை உறுதியும் ஓயா உழைப்பும் தேவை,
“ஓய்வு எடுத்துக் கொள்க” என்று சில மாற்றுக்கட்சி நண்பர்கள் கேலியாக கூறினர்.”ஓய்வு எடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறான்” என்று என் கல்லறையின் மீதுதான் எழுதப்படும் என்று பதில் சொன்னேன்.
சென்னை .1985 மு. கருணாநிதி.
நெஞ்சுக்கு நீதி . பாகம் : 4
| பிறப்பு | சூன் 3, 1924 திருக்குவளை, தமிழ்நாடு |
|---|---|
| அரசியல் கட்சி | தி.மு.க. |
| வாழ்க்கை துணை | பத்மாவதி தயாளு ராசாத்தி |
| பிள்ளைகள் | முத்து அழகிரி மு. க. ஸ்டாலின் செல்வி தமிழரசு கனிமொழி |
| இருப்பிடம் | சென்னை |
| சமயம் | இறைமறுப்பு[1] |












