துர்கா ஸ்டாலின்,செல்வி, மோகனா தமிழரசு ஆகிய மூவரு கண்ணீர் விட்டு கதறியபடியே வெளியே வந்தவர்கள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கோபாலபுரம் புறப்பட்டு சென்றனர். கலங்கியபடியே வெளியில் வந்த குஷ்புவை பெண்கள் சூழ்ந்து கொண்டு கேட்டார்கள்.
இதற்கிடையில் சென்னை ராஜாஜி மண்டபத்தை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கிற போது நெஞ்சம் பதறுகிறது. விரும்பத்தகாத ஒன்று வரக்கூடும் என ஊகிக்கலாம். கோபாலபுரம் இல்லத்திலும் கூட்டம் பெருக தொடங்கி விட்டது. கலைஞர் பயணிக்கும் அவரது காரை வெளியில் எடுத்திருக்கிறார்கள்.