இயற்கை எனும் அழகியல் சில நேரங்களில் சீற்றம் அடைவது உண்டு. அது வல்லரக்கனாக மாறுவதற்கு தமிழ் நிலம்தான் கிடைத்ததா?
தமிழுக்குத் தாத்தா இருந்தார். பாரதி இருந்தார்,பாவேந்தர் பாரதிதாசன் இருந்தார்,ஆனால் எல்லையைக் காக்க எவர் இருந்தார்?
திராவிட இயக்கங்கள் பிளவுண்டு கிடந்தாலும் மாற்றார் ஆதிக்கம் ஊடே புகுந்திட அனுமதிக்கவில்லை. எல்லைக் காவலர்களாக அந்த பேரியக்கங்கள் இருந்தன. அவசரநிலை பிரகடனம் செய்து பார்த்தும் திமுகழகம் புரண்டு விடவில்லை. திராவிட இயக்கங்களின் துணையின்றி தேசிய கட்சிகளால் கால் பதித்திட முடியவில்லை. ஊழலில் ஊறி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஜெ.இருந்தது வரை வடவர் ஆதிக்கம் புக முடியவில்லை. ஆனால் அந்த அம்மையார் மாண்டதும் அந்த இயக்கம் மண் புழுக்களாக மாறிவிட்டது. காவிகளுக்கு பல்லக்கு தூக்கிகளாக மாறி விட்டது. எல்லை காக்கும் மாவீரனாக ,மண்டியிடா தமிழனாக இருந்தவர் கலைஞர்தான் .
இன்று அவரும் நம்மிடையே இல்லை.
இனி என்னாகுமோ என்னருமைத் தமிழ்நாடு!
வடவரின் சிக்னல் கிடைக்காததால் பேரறிஞர் அண்ணாவின் அருகில் ஆருயிர்த் தம்பி கலைஞர் உறங்கிட தமிழக அரசு மறுத்து இருக்கிறது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய, எம்.ஜி.ஆர். சமாதியில் இடம் கொடுத்தது எந்த சட்டம்? ஒரு குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது பிரதமர் மோடிக்கு சம்மதம்தானா? ஜெ.மீது எத்தனை வழக்குகள்,அவர் மாண்டதால்தானே குற்றச்சாட்டுகளும் மரணித்து போயின.
இத்துணைக்கும் காரணம் பிஜேபி தலைமைதான்!
சட்டத்தை காரணம் காட்டுகிறது தமிழக அரசு!
ஆனால் வழக்குத்தொடர்ந்த துரைசாமியே வழக்கைத் திரும்பப்பெறுவதாக அறிவித்து விட்டார் .அது மட்டுமல்ல .தடையாணையே இல்லை. மேலும் அந்த இடம் கூவம் விரிவாக்கத்தில் வருகிறது. ஆனால் எம்.ஜி.ஆர். ஜெ. சமாதிகள்தான் கடற்கரை பாதுகாப்பு வட்டத்தில் வருகிறது என்கிறார்கள்.
கால்ப்புனர்ச்சிக்கும் எல்லை இல்லையா?