தி.மு.க.தலைவர் கலைஞர் உடல் நலிவுற்று படுத்தபின்னர் செயல்தலைவராக மாபெரும் இயக்கத்தைக் கட்டிக்காத்தவர் அவரது மகன் ஸ்டாலின் தான் ! எட்டுக்கோடித் தமிழர்களுக்கும் அறிமுகம் ஆனவர் .அவரது வழிகாட்டுதலின்படி திமுகழகம் வலிமை குன்றாமல் வளர்ந்து கொண்டு வருகிறது. ஆனாலும் மறைந்தது அவரது அப்பா. கழகத்தின் தலைவர். குடும்பமே கண்ணீரில்.! எல்லோரும் உறவு சொல்லி அழும்போது இவர் என்ன சொல்லி அழுவார்?
இதோ ஸ்டாலினின் குரல்.
“தலைவரே,தலைவரே,தலைவரே என்று அழைத்ததுதான் என் வாழ்க்கையில் அதிகம்.ஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா? உயரினும் மேலான உடன்பிறப்பே என்று ஒரு முறை எழுந்து கூற மாட்டீர்களா?”