
“விஜய் அரசியலுக்கு வந்தா தப்பா..ஒரு தமிழன் வந்தா என்ன தப்பு? லண்டனில் தமிழன் விஜய் உலகில் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார். பாராட்ட மனசு இல்லையே?”என எங்கள் இருவரின் பேச்சு தொடங்கியது.
“திரை உலகை சார்ந்த அமைப்புகள் கூட பாராட்டவில்லையே!?”
“பாராட்டப்பட்டது தமிழனாச்சே” என நறுக்கென தனது கருத்தை முடித்துக் கொண்டார்.
“சில அரசியல் சக்திகளுக்கு விஜய் அரசியலுக்கு வருவது பிடிக்கவில்லை.மக்கள் துணையுடன் ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து அவர்களுக்காக பாடுபடுவதில் என்ன தப்பு இருக்கிறது? ஒரு உண்மையான தமிழன் விஜய் வந்தால் என்னய்யா நட்டம்? புரையோடிப்போன லஞ்சம் ஒழிக்கப்படவேண்டும்” என தனது வேதனையைப் பதிவு செய்து கொண்டார்.












