
எதெதுக்கு மிரட்டுவது ? வெட்கக்கேடாக இருக்கிறது.
இந்தியாவின் கமர்சியல் கிங் என்று சொல்லப்படுகிற சல்மான்கானை கண்டபடி மிரட்டி இருக்கிறான் ஒரு ஆள்.!
அந்த ஆளுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது ஆசை, பாலிவுட்டைப் புரட்டிப்போட வேண்டும் என்கிற ஆசையுடன் நடிக்க வந்திருக்கிற ஆள்.
சல்மான்கானின் பெண் பி ஏ வுக்குப் போன் பண்ணி கானின் பெர்சனல் நம்பரை கேட்டிருக்கிறான் .பத்திரிகையாளர்களுக்கே பெர்சனல் நம்பர் தெரியாது. அப்படி இருக்கிற போது இந்த ஷாருக் குலாப் நபிக்கு மட்டும் கிடைக்குமா என்ன?
“இந்தா பார். நான் சல்மானை ஏன் காட் பாதராக நினைத்திருக்கிறேன் .நம்பரை கொடு”
“யாரா இருந்தாலும் கொடுக்க மாட்டேன்.பிளீஸ் தொல்லை பண்ணாதிங்க மிஸ்டர்,”
“நான் யார் தெரியுமா,ஸ்டேட்டையே கலக்குற சோட்டா ஷகிலினின் ஆள்.! கொலை பண்ணிடுவேன் சல்மானை!”
இப்ப அந்த ஆள் போலீஸ் விசாரணையில்!












