கஜா புயலால் உருக்குலைந்து போய்க் கிடக்கும் டெல்டா மாவட்டங்கள் இன்னும் தன்னிலைக்கு திரும்பவில்லை.
நடிகர்கள்,பிரபலங்கள்,தொழிலதிபர்கள் ,தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் செய்து வரும் உதவியால்தான் ஓரளவுக்கு மக்கள் நம்பிக்கையுடன் வாழத் தொடங்கி இருக்கிறார்கள்.
சூர்யா முதலில் 5 0 லட்சம் கொடுத்து நிதி உதவியை தொடங்கி வைத்தார். அண்மையில் அஜித் 1 5 லட்சம் கொடுத்திருக்கிறார். விஜய் தனது மன்றங்கள் வழியாக 5 0 லட்சம் வரை உதவி செய்திருக்கிறார்.
தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் பட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள கார்காவயல் கிராமத்தை முழுமையாக தத்து எடுத்து வழி காட்டி இருக்கிறார். “வாழ்நாள் முழுமையும் இந்த கிராமத்தின் காவலனாக இருப்பேன்” என சபதம் செய்திருக்கிறார்.