
படம் முழுக்க ரன்னிங் கேரக்டர் இந்த படத்தில்தான் சிங்கம்புலிக்கு கிடைத்திருக்கிறது. விமலுக்கு இணையாக வேட்டை ஆட வசமான வாய்ப்பு.
சேலம் வைத்தியர்களைத் தேடிப்போகும் வாலிப வயோதிகர்களுக்கும் , ஹார்மோன் எகிறல் அதிகமாகிப் போன இளவட்டங்களுக்கும் இந்தப்படம் ஒரு நந்தவனம். டபிள் மீனிங் திருவிழா.
அந்த பச்ச புள்ள அஷ்னா சவேரி ஒத்துழைப்பு எக்கச்சக்கம். எக்ஸ்ட்ரா பிட்டிங்களுடன் இவரும் மியாராயும் ஆடியிருக்கும் சடுகுடு நாடி தளர்ந்தவனையும் லேகியம் தின்ன வைத்து விடும்.
தெலுங்கு மூலத்தை சாமர்த்தியமாக இயக்குநர் ஏஆர்.முகேஷ் தமிழுக்கு தோதாக மாற்றியிருக்கிறார்.
கதை ஒன்றும் காதல் ஓவியமோ,கருத்துப்பெட்டகமோ இல்லை.!
வேல்ராஜ் மருந்துக் கடையில் விமலும் சிங்கம்புலியும் வேலை பார்க்கிறார்கள். சிங்கம்புலி தனிக்கட்டை. மனைவி ஓடிப்போய் விட்டாள்.ஏக்கமுடன் வாழ்கிற ஆளு. ஆபாச புத்தகங்களை படித்துக்கொண்டு வாழ்க்கை போகிறது.
விமல் பொலிகாளை.பக்கத்து வீட்டு ஆன்டிக்கு அப்பப்ப புருசன். ஆன்டி யாருங்க. செம ஆக்சன் காட்டுறாங்க.. காரியம் முடிந்ததும் ஜாக்கெட்,சேலையை ஒழுங்கு படுத்துகிற பாங்கு அசத்தல்மா.!
விமலுக்கும் சி.புலிக்கும் எக்ஸ்ட்ரா வேலை திருடுவது.ஒழுங்காவே போய்க்கொண்டிருக்கிறது பொழைப்பு.ஆளுக்கு ஐந்து லட்சம் கிடைத்ததும் ஊரை விட்டு கிளம்பி ஆனந்தராஜிடம் மாட்டி அல்லல் படுகிறார்கள் அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பது கதை. இருவருக்கும் இந்த படத்தில் ‘கடுமையான’ வேலைங்க! பாவப்பட்டவர் விமல்தான். மியாவின் பசி தீர்க்கும் எந்திரமா ஆகிட்டாரு!
இந்த கதையை ‘தூக்கி’பிடிப்பது ‘தாங்கி’கொள்வது அஷ்னா,மியா இருவரது முக்கியப் பொறுப்பு. பச்சை வசனங்களை பக்குவமாக புகுத்தி காட்சிகளை சென்சார் கட் பண்ண விடாமல் ஏ சர்டிபிகேட் வாங்கிய சாதனை இயக்குநருக்கு.!
லாஜிக் என்பதெல்லாம் இந்த கதையில் அனாவசியம். ஆஜானுபாகான இரண்டு அடியாள்கள் இருக்கும் போது வத்திக்குச்சி மாதிரி இருக்கிற விமலை மியா நாடுவாரா? இந்த படத்தில் மிகப்பெரிய ஆச்சரியமே அஷ்னா சவேரியின் இணக்கம்தான்!
வாலிபக் கோளாறில் வாடி வதங்குகிறவர்களுக்கு நிவாரண லேகியம்.!












