படத்த பாக்கிறபோதே வில்லங்கத்துக்கு வெத்தல பாக்கு வைக்கிறாங்கங்கிறது தெரிஞ்சி போச்சு.!
பூவைப் போடுறாங்களா,இல்ல கல் அடிக்கிறாங்களாங்கிறது படம் வந்தாத்தான் தெரியும்.!
எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா தொடர்பான படம் மாதிரிதான் இருக்கு.
சீரியசான கதையா அல்லது நக்கல் அடிக்கிற சட்டையரா என்பதை இதுவரை யாரும் சொல்லவில்லை.
மரணித்தவர்கள் அரசியல்வாதிகளாக இருந்தால் அவர்கள் மண்ணுக்குள் போன பின்னரும் லொள்ளு மன்னர்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதற்கு இந்த படமே சான்று.
படத்தின் நாயகன் ஆர்.ஜெ.பாலாஜி என்பதால் நையாண்டி மேளம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
பார்க்கலாம்.