“பல்லுல நாக்குப் படாம வசனம் பேசணும்.பேசு”என்று குச்சியை கையில வச்சிக்கிட்டு மிரட்டுற பாலாவுக்கா இந்த சோதனை?
கோலிவுட்டே கலங்கிது சார்!
அது நெஜமா ,போலியா என்பதெல்லாம் எக்ஸ்பெர்ட்களுக்கு மட்டுமே தெரியும்.
வர்மா படத்தை மொத்தமா சுருட்டி பரண் மேல வீசிட்டார் புரொட்யூசர் முகேஷ் .
“என்ன சார் படம் எடுத்திருக்கார்.ஒண்ணுமே சரியில்ல,துருவ் மட்டும் நடிச்சிருக்கார்.மத்தவங்க நடிப்பு பிடிக்கல”என்றாராம்.
ஹீரோயின் மேகா சவுத்ரிக்கு படம் டிராப் என்கிற மேட்டரே தெரியாதாம்
.யாரும் சொல்லல.அந்த பெண்ணு செம காண்டுல இருக்கு.
தயாரிப்பாளர் முகேஷ்க்கும் பாலாவுக்குமான மோதலை தவிர்க்க சீயான் விக்ரம் எவ்வளவோ முயன்று இருக்கிறார்.முடியவில்லை என்கிறார்கள்..
பாலா கில்லாடி என்பதில் சந்தேகம் இல்லை. முரடரே தவிர முட்டாள் இல்லை. எங்கேயோ பிழை நடந்திருக்கு. அற்புதமான கலைஞனை இழிவு படுத்தும் வழிகளில் இதுவும் ஒன்றுதானோ?