அம்மாவை இழந்து அப்பாவின் பாசத்தில் வாழ்கிற கோடீஸ்வர வீட்டுப் பிள்ளை கார்த்தி.!
ஓடிப்போன அப்பாவினால் ஆண்களையே வெறுக்கும் அமெரிக்கத் தொழில் அதிபராக ரகுல் பிரீத் .
இருவருக்குமான காதலும் மோதலும்தான் கதை.
சாகசம் செய்வதுதான் வாழ்க்கை என்கிற நம்பிக்கையுடன் நண்பர்களுடன் வாழ்க்கையை கடத்துகிற கார்த்திக்கு பழக்கமான கேரக்டர்.
வசதியான வாழ்க்கை, துணிந்தால் தோல்வி இல்லை என்கிற மனவலிமை இரண்டும் இருந்தாலும் காதல் வலி எத்தகையது என்பதை அழகாக ,அழுத்தமாக காட்டியிருக்கிறார் கார்த்தி.
பேஸ்புக் நட்பு நாடி ரகுலிடம் கேட்பது,காதலை சொல்வது, எதிர்பாராத இடங்களுக்கு அழைத்துச் சென்று இன்ப அதிர்ச்சி அளிப்பது, பால்வண்ண வீதியின் அழகை ரசிப்பது, பெங்களூர் -சென்னை பைக் பயணத்தை காதலியுடன் ரசிப்பது,இப்படி கார்த்தி ஏரியா ஜிலுஜிலுக்கிறது. இமயமலை பயணம் அற்புதம்.சில வினாக்களும் எழாமல் இல்லை.
ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் கேமராவினால் அந்த வினாக்கள் பனியில் கரைந்து விடுகிறது.காட்சி ஓட்டத்தில் நமக்கும் மறந்து விடுகிறது.
ரகுல் பிரித்தின் அடமும் நமக்கு பிடிக்கிறது. காதலும் பிடிக்கிறது.கர்வமும் பிடிக்கிறது. கார்த்தியை பிரிந்தபின்னர் தன்னிலை கொள்ளாமல் தவிக்கும் தவிப்பு அனுபவசாலிகளுக்குத்தான் வரும். \
அழகான காதல் கதையை காமடியன் வழியாக சொன்னதும் முற்பாதியில் நாயகனை விட விக்னேஸ்காந்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதும் உரைநடை படிப்பது மாதிரி இருக்கிறது.
பிரகாஷ் ராஜ் ,ரம்யா கிருஷ்ணன் இருவரும் சரியான தேர்வு. முரட்டுக்காளையை எப்படி அடக்கினாய் என்கிற பாவனையுடன் கார்த்தியை பாராட்டும் இடத்தில் ரம்யாவின் முத்திரை.
அமெரிக்கா ,உக்ரைன் ,மும்பை ,இமயம் என வேல் ராஜின் கேமரா முத்திரைகள்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பின்னணி இசையைத் தவிர பாடல்களில் கபிலனின் “எங்கேடி போன”இதம்.
இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இன்னும் புதுமையாக ந்தித்திருக்கலாம்.












