
பார்த்தீபன் என்றால் வசனங்களில் வம்பு தடவிக்கொள்வார் ,அல்லது தடவி விட்டுவிடுவார்கள் என்பார்கள்.நைஸ் குத்தாக குத்துவது அவரது ஸ்டைல்.
குப்பத்து ராஜா படத்தில் அவருக்கு பல முகங்கள். எம்.ஜி.ஆர். ரசிகர் என்கிற வசமான முகமும் கிடைத்திருக்கிறது. கழுத்தில் எம்.ஜி.ஆர்.டாலர்,கருப்புக்கண்ணாடி,புஷ்குல்லா சகிதம் ஊமைக்குத்தாக அரசியல்வாதிகளை குத்தி இருப்பதாக சொல்கிறார்கள்.
இக்கால அரசியல்வாதிகளை எப்படிக் குத்தினாலும் அவர்களுக்கு வலிக்கப்போவதிலை.தடித்த தோலர்கள் என்றால் சரியாகப் பொருந்துமோ என்னவோ.! பிரச்னைக்கு ஆரத்தி எடுக்கபோகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.












