
தமிழ்த்திரை உலகில் இன்று காலை அடித்த சுழல் காற்றில் அரிதான பொக்கிஷம் ஒன்று களவாடப்பட்டு விட்டது.
மகேந்திரன். மனிதம் அறிந்தவர்.
வில்லனாக அறியப்பட்ட ரஜினிகாந்தை மடை திருப்பி விட்டு தமிழ்ச்சினிமாவை செழிக்க செய்தவர்.அவரது வசனங்களில் வசீகரம் இருக்காது.வாழ்க்கை இருக்கும் .
மனிதர்களின் மகிழ்ச்சி,வலி இரண்டையும் அவரது படைப்புகள் வழியாக சொல்வார். நயம் இருக்கும். துக்ளக்கில் அவர் துணை ஆசிரியராகவும் இருந்தார்.
79 வயது.
முள்ளும் மலரும் அவர் இயக்கத்தில் வந்த முதல் படம். நெஞ்சத்தை கிள்ளாதேயில் சுகாசினியை அறிமுகம் செய்து வைத்தார்.
இவரது படைப்புகள் அத்தனையுமே இயல்பு நிலை தாண்டாதவை.
அட்லியின் இயக்கத்தில் தெறி படத்தில் வில்லனாகவும் நடித்திருந்த இவர் கடைசியாக கரு.பழநியப்பனின் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் அருள்நிதியுடன் நடித்து வந்தார்.
முதுமை அவரை டயாலிசஸ் நிலைக்குக் கொண்டு போனது.ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை. இன்று அதிகாலை இயற்கையுடன் இணைந்து விட்டார்.
அவரது புகழ் என்றும் நிலைத்திருக்கும்.












