தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் (PRO) யூனியனின் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அன்மையில் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பதவியேற்பு விழா நேற்று நடை பெற்றது.
இந்த புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தமிழக அரசின் மாண்புமிகு அமைச்சர் ராஜ் மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்த முக்கிய நிகழ்வில் தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பல்வேறு திரைப்பட சங்கங்களின் முக்கியப் பிரதிநிதிகள் பலரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் பேசிய அமைச்சர் ராஜ் மோகன்,
”சினிமா துறையின் வளர்ச்சிக்கும், திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களின் செய்திகளைத் துல்லியமாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் பி.ஆர்.ஓ-க்களின் பங்கு இன்றியமையாதது என்று பாராட்டினார். மேலும், புதிய நிர்வாகிகளின் தலைமையில் இந்தச் யூனியன் மேலும் பல நன்மைகளையும், உறுப்பினர்களின் நலன்களையும் காக்கும் வகையில் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் வாழ்த்திப் பேசினார்.”
அமைச்சரின் வருகையும், திரையுலகப் பிரபலங்களின் வாழ்த்துகளும் தங்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாகப் புதிய நிர்வாகிகள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியனின் உறுப்பினர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இத்தேர்தலில் புதிய தலைவராக B. யுவராஜ், செயலாளராக N. விஜயமுரளி மற்றும் பொருளாளராக V.K. சுந்தர் ஆகியோர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மேலும் துணைத்தலைவர்களாக S. புவனேந்திரன் மற்றும் S. சதீஷ்குமார் ஆகியோரும், இணைச்செயலாளர்களாக G. பாலசுப்ரமணியன் (பாலன்) மற்றும் R. உதயகுமார் ஆகியோரும் பொறுப்பேற்றுள்ளனர்.
இவர்களுடன் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக கிளாமர் சத்யா, மதுரை R. செல்வம், மதி ஒளி எஸ். குமார், நிகில் முருகன், ஆர். ராமானுஜம், D. நித்தீஷ் ஸ்ரீராம், C. சதீஸ்வரன், ஏ. பரணி மற்றும் எஸ். வேலு ஆகிய ஒன்பது பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தலைவர் யுவராஜ் தலைமையிலான அனைத்து புதிய நிர்வாகிகளுக்கும் அமைச்சர் ராஜ் மோகன் அவர்கள் பொன்னாடை போர்த்தி, மலர்க்கொத்து வழங்கி தனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் நிகழ்வில் பங்கேற்ற திரையுலக விஐபிக்களும் புதிய நிர்வாகிகளுக்குத் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.













