
அரசியல் ரொம்பவே கெட்டுப் போச்சு என்பதற்கு நாட்டு நடப்பைப் பார்த்தாலே தெரிஞ்சிபோகும்.
கவுன்சிலர் பதவியிலேயே பல் கோடி சம்பாதிக்கலாம் என்கிற புதிய சித்தாந்தத்தை உருவாக்கி விட்டார்கள்.
ஆனால் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் புத்தி மாறாதவரை இந்த கேவலம் நீடிக்கவே செய்யும்.
சினிமாவிலும் கூடுமானவரை புத்தி சொல்லிவருகிறார்கள். விரைவில் வரவிருக்கும் சூர்யாவின் ‘என்.ஜி.கே.’ படத்தில் ஒரு பாட்டு.
யுவன் சங்கர் ராஜா இசையில் கபிலன் எழுதி இருக்கிறார். சுருக் கென இருக்கு.
“தண்டல்காரன் பார்க்குறான்
தண்ட சோறு கேக்குறான்
பொடி வச்சு பேசுறான்
கண்டபடி ஏசுறான்
பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சு
நாட்டாமையின் கையில்
நாடு கெட்டு போச்சி
இந்தியனின் பண்பாட்ட
அந்நியனோ வாங்கிட்டானே
ஆதார் அட்டை இல்லாம
ஆட்சி செய்ய வந்தானே
ஊரு சேரி ஒண்ணா இல்லையே
நம்ம நாட்டில்
காதல் செஞ்சவன வெட்றான்
நடு ரோட்டில்
செத்தபின்பும் நீ தள்ளி வச்ச
சுடுகாட்டில்
பாம்பு கூட கிளி வாழுமே
ஒரு கூட்டில்












