2.0 பட நடிகை எமி ஜாக்சனின் படத்தினால் இன்டர்நெட் தளமே சூடாகிக் கிடக்கிறது. கல்யாணம் செய்யாமல் கர்ப்பம் அடைவது வெள்ளைக்கார சீமையில் அதிசயம் அல்ல.ஆச்சரியமும் இல்லை.
மனசுக்கு பிடித்துப் போய்விட்டால் மத்தளம் கொட்டி மனம்போல வாழ்கிறவர்கள் .அப்படியொரு வாழ்க்கை எமிக்கு!
கல்யாணத் தேதியை நிச்சயம் செய்து விட்டு நாடு நாடாக சுற்றிக் கொண்டிருக்கிறார். அண்மையில் மொராக்கோ தலைநகர் சென்ற எமி அங்குள்ள ஹோட்டல் பால்கனியில் நின்றபடி போஸ் கொடுத்த படத்தை நெட்டில் பதிவு செய்திருக்கிறார்.இது அவருக்கு ஒரு ஹாபி…
தாய்மையின் செழிப்பு எப்படியெல்லாம் வளர்ந்திருக்கிறது.இது வரம்.!
ஆனால் பார்ப்பவர்களுக்கோ…?