
நவீன கட்டிடக்கலையின் அம்சமாக நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நாசர் தலைமையில் அமைந்த நிர்வாகம் அந்த கட்டிடத்தை முக்கால் பகுதி கட்டி முடித்திருக்கிறது.
கட்டிடம் முழுமை பெறுவதற்குள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வந்து விட்டது.
எஞ்சிய கட்டிடப் பகுதியை நாசர் தலைமையிலான குழு கட்டி முடிக்குமா,அல்லது போட்டியிடும் புதிய குழு கட்டி முடிக்குமா?
அதுதான் தேர்தலின் முக்கிய அம்சமாக இருக்கும்.
இந்த நிலையில் சங்கக் கட்டிடத்துக்காக நடிகர் கார்த்திசிவகுமார் ஒரு கோடி வழங்கி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தொகையை தற்போது வழங்கி இருக்கிறார்












