
- “அனுபவம் புதுமை.. அவனிடம் கண்டேன்
- அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே
- பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே!”
இப்படியெல்லாம் பாடிப்பறந்த காதல் அனுபவங்களை கண்ணுக்குள் கொண்டு வந்து அதை மனதுக்குள் படமாக பார்க்கிற பரவசம் இருக்கே….ஜென்மத்துக்கும் போதும்யா..!
- சுகமோ சுகம்!
இப்படி சொன்னதும் சுய இன்பக் காட்சியில் நடித்த கியாரா அத்வானியின் முகம்தான் நினைவுக்கு வருகிறது.
“பத்தாப்பு படிக்கிற போது சக மாணவன் மீது காதல். அந்த வகுப்பில் நான் மட்டும்தான் பொண்ணு.! அவனும் காதலித்தான் .ஆனால் எங்க குடும்பம் கன்சர்வேடிவ் .இந்த காதல் ,ஊதல் எல்லாம் பிடிக்காது.படிப்பில கவனம் செலுத்திடி மவளேன்னு எங்கம்மா என்னோட பேசல .எப்படி பெத்தவளுடன் பேசாமல் இருக்க முடியும் ? காதலை கைம்மா பண்ணிட்டு படிப்புல கவனம் செலுத்திட்டேன்” இது கியாராவின் முதல் முதலான லவ் எக்ஸ்பீரியன்ஸ்.
அடுத்து நம்ம காதல்.,காஜல் அகர்வாலுடையது.
” நடிக்க வந்தபிறகுதான் அந்த வாலிபருடன் டேட்டிங் போனேன். நல்லாத்தான் இருந்தான். என்ன ஆச்சுன்னு தெரியல் .சினிமாவில இருக்கிறவர்களைப் பத்தி தப்புத்தப்பா பேச ஆரம்பிச்சிட்டான். அப்ப நாளைக்கும் நம்மை பத்தி இப்படித்தானே பேசுவான்னு அத்து விட்டுட்டேன்”












