அண்டை மாநிலத்தை சேர்ந்த பொண்ணுதான் பாடகி சின்மயி. நல்ல குரல் வளம். தமிழை பிழையில்லாமல் உச்சரிக்கும் பெண். இதனால் பலருக்கு பின்னணி பேசுகிற வாய்ப்பும் தமிழில் கிடைத்தது.
கவிஞர் வைரமுத்து தனது கல்யாணத்துக்கு வந்தேயாகவேண்டும் என சொல்லி வற்புறுத்தி அழைத்து சென்றவர்.
அப்படிப்பட்டவர்தான் திடீரென பெண்ணியக்கவாதியாக மாறி மீடூ வை தமிழ்நாட்டில் பிரபலமாக்கினார். தீட்டிய மரத்தின் மீதே கூர் பார்த்தார். வைரமுத்து மீது பாலியல் புகார் சொல்லி இன்று வரை அதை நிரூபிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.
இதெல்லாம் தெரிந்த வெங்காயம்தானே புதுசா என்னவே இருக்கு அதை சொல்லுவே!
சொல்வோம்ல.!
சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திர்.தெலுங்கு படங்கள் டைரக்ட் பண்ணி கொண்டிருக்கிறார்.
மன்மதுடு 2 என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். நாகார்ஜுனா,ரகுல்பிரீத் சிங்,நடித்திருக்கிற படம். சமந்தா, கீர்த்தி சுரேஷ் அக்ஷரா கவூர் ஆகியோர் கவுரவ தோற்றம்.
இந்தபடத்துக்கான விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படத்தை சின்மயி புரமோட் பண்ணிக்கொண்டிருக்கிறார்.
இதுல என்ன சிக்கல்னா இந்த சின்மயி சிந்திய கருத்துக் குவியலில் கதாநாயகர்கள் பற்றிய வில்லங்கமும் இருக்கு.
“தன் புள்ளை வயசுப் பொண்ணுகளுடன் ஹீரோக்கள் ஜோடி போட்டு நடிக்கிறாங்க ….!” மதினி சின்மயி இப்படி சொன்னதை மறந்திட்டாரா..நாகார்ஜுனாவுக்கு தாத்தா வயசு ஆகலியா? இப்படி நெட்டிசன்கள் கேட்டு கிழிக்கிறாங்க.
இத்தோடு விட்டா பரவாயில்லியே