Wednesday, June 17, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளை வைத்துக் கொண்டு எப்படி நீட் தேர்வு எழுத இயலும்? ஜோதிகா கேள்வி.

admin by admin
June 26, 2019
in News
435 5
0
609
SHARES
3.4k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்ச்சினிமாவில் நடிகைகளைப் பொருத்தவரை இரண்டு ஆளுமைகள் உண்டு.

You might also like

அல்லு அர்ஜூன் படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் மோடி!

அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

ஒன்று ஜோதிகா. மற்றவர் நயன்தாரா.

ஜோதிகா மணமானவர்.இரு பிள்ளைகளுக்கு தாய். குடும்பச் சுமை .ஒழுக்கமான குடும்பத்தின் மருமகள். குறிப்பிட்ட படங்களில் மட்டுமே நடிப்பவர். தைரியமாக செய்தியாளர்களை  சந்திக்கிறார்.

நயன்தாரா. நான்கு மாநிலங்களும் தேடும் உச்ச நடிகை. உயர்ந்த சம்பளம் வாங்குகிறவர்.மணமாகவில்லை. ஆனால் காதலின் சுவை அறிந்தவர்.உல்லாசி. பத்திரிகையாளர்களை  சந்திப்பதை தவிர்ப்பவர்.

ஆனால் ஜோதிகாவின் அளவுக்கு சமுதாயநோக்கு நயனுக்கு இருக்கிறதா ? 

 ஜோதிகாவின் ‘ராட்சசி ‘பட பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தவர்கள் அவரது பேச்சில் காணப்பட்ட சிந்தனைக்குரிய விஷயங்களைக் கேட்டு வியந்து போனார்கள்.

எவ்வளவு விஷயங்கள்!

இனி ஜோதிகாவின் பேச்சு:

“சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர் நிறுவனம் படம் பண்ணிட்டு இருந்தார்கள். நானாக தான் போய் கேட்டேன்.

ட்ரீம் வாரியர் நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது.

அவர்களது கதைத் தேர்வு அற்புதமாக இருக்கிறது. ஆகையால் தான் முதல் முறையாக புது இயக்குநருடன் பணிபுரிகிறேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்களது உதவி இந்தப் படத்தில் நிறையவே இருந்தது. 

இயக்குநர் கெளதம் 2 மணி நேரம் கதை சொன்னார். அரசாங்க பள்ளி எப்படி நடக்க வேண்டும் என்ற மெசேஜ் ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனாலும், இந்தக் கதை அவ்வளவு புதிதாக இருந்தது. இதிலிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அற்புதமாக இருக்கும். இதிலுள்ள காதல் ட்ராக் புதிதாக இருக்கும். ஒரு அப்பா, பெண்ணோட ரிலேஷன்சிப் புதிதாக இருக்கும். இயக்குநர் கல்யாணத்துக்கு முன்பு எப்படி இவ்வளவு அனுபவமாக வாய்ந்தவராக இருக்கிறார் என்று தெரியவில்லை.
புதிய இயக்குநர்கள் கதைச் சொல்லும் போது, ஒரு தெளிவுடன் படம் மூலமாக சமூகத்துக்கு என்ன கருத்துச் சொல்லப் போகிறோம் என்று தெளிவாக சொல்கிறார்கள். நடிகர்களின் மார்க்கெட், வியாபாரம் பற்றி யோசிக்காமல் கதைக்கு உண்மையாக இருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் எனது புதிய நடிப்பைப் பார்க்கலாம். நீங்கள் நடிக்கலாம், ஆனால் அதில் கீதாராணி டீச்சர் இருக்க வேண்டும் என்று சொல்வார் இயக்குநர்.
அவரது கோபம் தெரிய வேண்டும் என்பார். பாரதி தம்பி சார் வசனம் எழுதியிருக்கார். அவருக்கு நான் பாதி  ஒரு வட இந்தியப் பெண் என்ற யோசனை வரவில்லை என நினைக்கிறேன். அவ்வளவு கடினமாக வசனங்கள் இருந்தது.  இந்தப் படத்தின் முக்கியமாக  இருந்ததில் மகிழ்ச்சி.

ஒளிப்பதிவாளர் கோகுல் என்னை ஒல்லியாக காண்பிக்க ரொம்பவே கஷ்டப்பட்டார். அவர் பணிபுரியும் படத்தில் மீண்டும் நடிக்க ஆசையாக இருக்கிறது. அவரது உழைப்பு அபாரமாக இருந்தது. மதிய உணவுபடத்தின் எடிட்டிங்கே புதுமையாக இருந்தது.

ட்விட்டரில் சிலர் பெண் சமுத்திரக்கனி, சாட்டை படம் என்றெல்லாம் சொல்லியிருந்தார்கள். இந்தப் படத்தில் அதே அரசாங்கப் பள்ளிகள் தொடர்பான கருத்து இருக்கலாம். ஆனால், படம் அப்படியில்லை. 100 படங்கள் இதே போன்று வந்தாலும் கூட, இது தேவை தான்.

சமூகத்துக்கு தேவை தான். பெரிய பட்ஜெட் படங்களில் கூட ஒரே கதையை வேறொரு பார்வையில் சொல்கிறார்கள். அதைப் பற்றி பேச யாருமே தயாராக இல்லை. நாயகன் வருவார், 2-3 நாயகிகளை காதலிப்பார், இடைவேளை, எமோஷன், க்ளைமாக்ஸ் என இருக்கும். அதைப் பற்றி யாருமே பேசுவதே இல்லை. அதை விட்டுவிட்டு இந்தப் படம் மட்டும் ஏன் பள்ளிக்கூடம், சாட்டை மாதிரி இருக்கிறது என சொல்வது ஏன் என தெரியவில்லை. 

அகரன் பவுண்டேஷனில் 99% மாணவர்கள், அரசுப் பள்ளியிலிருந்து வந்திருக்கிறார்கள்.

அதில் சுமார் 35% மாணவர்களிடம் பேசும் போது, அவர்களது வகுப்பறைக்கு ஒரு வருடமளவுக்கு ஆசிரியர்களே வரவில்லை. ஆசிரியர்களே இல்லாமல் இருக்கிறார்கள்.
அந்த மாதிரியான ஒரு சூழலைக் கொடுத்துவிட்டு, எப்படி நீட் தேர்வு எழுதச் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் அரசாங்க பள்ளியில் படித்தவர்கள் தான்.  ஆகவே, இதே மாதிரியான கருத்துகள் 100 படத்தில் வந்தால் கூட நிம்மதியாக உட்கார்ந்து பார்க்கலாம். 

இந்தப் படத்தில் நடித்துள்ள பூர்ணிமா பாக்யராஜ் மேடம் தான் படப்பிடிப்பில் என் துணை. ஒரு எமோஷன் காட்சியில் இருவரும் இணைந்து நடித்துள்ளோம். அவர் ஒரு அற்புதமான நடிகை.  

5 ஆண்டுகளுக்கு முன்பு என் பெண்ணுடைய பள்ளி ஆண்டுவிழாவில் டீச்சர் ஒருவர் பேசியதை இங்கு கூறலாம் என நினைக்கிறேன்.

ஏனென்றால் அந்த வார்த்தைகளை கேட்டபின்னர் அதனை என் வாழ்க்கையில் கடைப்பிடித்து வருகிறேன்.
மலையில் உயரமான இடத்துக்கு ஏறிவிட்டு, கீழே நிற்பவர்களை பார்ப்பதற்கு பெயர் வெற்றி என இருக்கலாம்.
அது வாழ்க்கையில் ஒரு சாதனை கிடையாது.
எது முக்கியம் என்றால், மலை ஏறும் போது கிடைத்த அனுபவம் தான் அழகாக இருக்க வேண்டும். சுற்றியிருப்பவர்களும் நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் இருக்க வேண்டும்.
இந்த வார்த்தைகளை என் 2-வது திரையுலக பாதையில் கடைப்பிடிக்கிறேன்.
எனக்கு ரொம்பவே அழகான கதைகள் வருகிறது. நான் அதிலிருந்து சிறந்ததை தேர்வு செய்கிறேன்.
அதுக்கு மேல் பெண்களுக்கு மரியாதை கொடுக்கிற ஆண்களை அதிகமாக இந்தப் பயணத்தில் தான் சந்தித்திருக்கிறேன்.
அம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது. அதுவே என் வாழ்க்கையில் மிகப்பெரிய் சாதனையாக நினைக்கிறேன்.”என்றார்  திருமதி ஜோதிகாசூரியா.
Tags: எஸ்.ஆர்.பிரபுகவுதம்ஜோதிகாடிரீம் வாரியர்ராட்சசி
admin

admin

Related Posts

அல்லு அர்ஜூன்  படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் மோடி!
News

அல்லு அர்ஜூன் படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் மோடி!

by admin
June 16, 2026
அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!
News

அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!

by admin
June 16, 2026
‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!
News

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

by admin
June 16, 2026
‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!
News

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

by admin
June 15, 2026
‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!
News

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

by admin
June 15, 2026

Recent News

அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!

அஷ்ரஃப் இயக்கி, நடித்துள்ள திரில்லர் திரைப்படம் “ஃபோட்டோகிராஃபர்’!

June 16, 2026
‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

‘டார்க்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

June 16, 2026
‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

‘நாகபந்தம்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட ரதயாத்திரை!

June 15, 2026
‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – இயக்குநர் பா ரஞ்சித்!

June 15, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?