
பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்திருக்கிறார்கள்.
தனக்கென தனி அடையாளங்கள் வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் இயக்கிய படங்கள் பெரும்பாலும் வெற்றியைத்தான் கொடுத்திருக்கின்றன ,சில டம்மியாகி விட்டன.
பாலா, ஹரி, கவுதம் மேனன், செல்வராகவன், முருகதாஸ், ஷங்கர்,கே.எஸ்.ரவிகுமார்,இவர்களெல்லாம் முன்னணி நடிகர்களின் இஷ்ட தேவதைகள் மாதிரி.!
பாலாவின் ஒரு படத்திலாவது நடிக்கனும்பா…!பிரமாண்டமான டைரக்டர் ஷங்கர் அவர் படத்தில ஒரு கெஸ்ட் ரோல் கிடைச்சாலும் பரவாயில்ல இப்படியாக ஒவ்வொரு இயக்குநருக்கும் இமேஜ் இருந்தது.
ஆனால் புதியவர்கள் வந்து புதுமுகங்களை வைத்து வெற்றிப்படங்களை தந்ததும் முன்னணி நடிகர்களின் பார்வை மாறத் தொடங்கி இருக்கிறது.
தயாரிப்பாளர்களும் சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள். கோடிகளில் சம்பளத்தை கொட்டிக் கொடுத்தும் சூப்பர் டைரக்டர்கள் சொதப்பலான படங்களியே தருகிறார்கள். உதாரணம் என்.ஜி.கே .
ஆனால் புதிதாக வருகிறவர்கள் புதிய சரக்குகளைத் தருகிறார்கள் .ஆகவே பெரிய இயக்குநர்களைத் தவிர்ப்போம் என சிந்திக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பெரிய இயக்குநர்களில் புத்திசாலித்தனமாக கே.எஸ்.ரவிகுமார்,நடிப்பு,தயாரிப்பு என்பதில் இறங்கி விட்டார்.
ஷங்கருக்கு இந்தியன் 2 இன்னமும் இறுதி முடிவு செய்யப்படவில்லையாம்.
முருகதாஸ்,அட்லீ போன்றவர்களுக்கு படங்களின் வெற்றியைப் பொறுத்து வாய்ப்புகள் வருகின்றன.












