
கதை இயக்கம்: சந்துரு, ஒளிப்பதிவு: பாலசுப்பிரமணியெம், இசை:கேபி ,எழுத்து:கதிர் நடராஜன் .
தீரஜ், ப்ரதாயினி,துஷாரா,மீராமிதுன் , டத்தோ ராதாரவி,சார்லி.
***************
வழக்கமான ஜானரில் இருந்து மாறி இருக்கிறது.
குடி,கஞ்சா,கொக்கெயின்,எல்.எஸ்.டி.போன்ற போதைப் பொருட்களின் தீமைகளைச் சொல்லி பின்னர் திருந்துவதைப்போல காட்டுவார்கள்.ஆனால் இயக்குநரின் கற்பனை போதைக்குள்ளேயே ஆழ்ந்துவிட்டது.
இப்படிச்சிந்தித்தால் என்ன… விடிந்தால்கல்யாண பந்தல் கால் நட வேண்டும்.மாப்பிள்ளைப் பையனுக்கு கையில் காப்புக்கட்டிவிட்டு ‘எங்கேயும் போகாதே”என்று வீட்டுப் பெரிசுகள் சொல்ல அவன் அதை கேட்காமல் நண்பன் வீட்டுக்குப் போகிறான்.
குடிகார நண்பர்கள்,கூத்தடிக்கிறார்கள். சக நண்பன் மூக்கினால் உறிஞ்சும் டிரக்ஸ் பற்றி சொல்லிக்கொடுக்க அதை நிஜமாகவே மாப்பிள்ளைப் பையன் உறிஞ்ச அடுத்து என்னென்ன கொடூரங்கள் ,கொலைகள் நடக்கின்றன என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
அந்த எல்.எஸ்.டி ( ? ) பவுடர் சிவப்பு நிறமாக இருக்கிறது. அது அவனது மூளைப்பகுதிக்கு சென்றதும் ஏற்படுகிற மாற்றங்கள் கற்பனையாக ,அவனது கண்களுக்கு தெரிகிற நிகழ்வுகள் இவைதான் கதை. அனைவருமே போதையில் கிடப்பதால் கதாநாயகன் செய்வது எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை.படம் பார்ப்பவர்களையும் சற்றுக் குழப்புகிறது.அவன் காற்றோடு சண்டை போடுவதை மனிதர்களுடன் சண்டையிடுவதாக நினைக்கிறான். நல்ல யுத்தி.
அவனுக்குப் போதை தெரிந்த பின்னர்தான் போதை மருந்து கடத்தல் உயர் அதிகாரியின் கோர முகம் நண்பனின் துரோகம் எல்லாமே தெரிகிறது. அதிகாரியாக நடித்திருப்பவர் செம ஸ்மார்ட். நடிகைகளில் துஷாரா என்பவர் கண்களிலேயே காதலையும் சொல்கிறார்,கவலையும் சொல்கிறார்,ராதாரவிக்கு கவுரவ வேடம்.
இந்த படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கிப் பிடித்திருப்பவர் ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம். இவரது கேமராக் கோணங்கள் அந்த காட்சிகளுக்கு ஏற்ப பயங்கரத்தைத் தருகிறது.
இன்னும் குறைத்திருக்கலாம் படத்தின் நீளத்தை.!
சினிமா முரசத்தின் மார்க் 2 / 5












