
நாளைடைவில் குறும்படங்களின் ஆதிக்கம் அதிகமாகும் என சொல்லலாம்.
நல்ல கருத்துகளை சொல்கிறார்கள்.சமுதாயத்தில் நடக்கிற அநியாயங்களை அச்சமின்றி தோலுரித்துக் காட்டுகிறார்கள்.
அந்த வகையில் வந்திருப்பதுதான் ‘குலசாமி ‘
இந்த குறும்படத்தை பாக்கியராஜ் இயக்கி உள்ளார். லயோலா கல்லூரி மாணவன் கிஷோத் இதில் நாயகனாக நடித்திருக்கிறார். நிஜில் இசையமைத்திருக்கும் இக்குறும்படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரேசன் படத்தொகுப்பு செய்துள்ளார்.
சாதியால் மனிதம் அழிந்து கொண்டிருக்கிறது என்ற சமூக கருத்தை வலியுறுத்தி வந்திருக்கிறது.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. கூறும்போது, ‘இந்தியா முழுவதும் அண்மைக் காலமாக நடைபெற்று வரும், சாதி மதம் விட்டு திருமணம் செய்யும் இளம் தம்பதியரை படுகொலை செய்யும் ஆணவ கொலைகள், வறட்டு கவுரவ கொலைகள் அனைத்து தளங்களிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது.
இந்திய அரசு ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். சமூகத்தில் நடக்கும் இந்த பிரச்சினையை குல சாமி குறும்படம் மூலம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாக்கியராஜ்.
இன்றைய தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த படத்தை கொடுத்த பாக்கியராஜுக்கு வாழ்த்துக்கள்’ என்றார்.












