காந்தி காட்டிய வழியில் நாடு செல்லுதோ, இல்லையோ, நடிகர்கள் காட்டிய வழியில் செல்லத் தயாராகுது.!
ஒரு காலத்தில் மாராப்பு நழுவினாலே ஆபாசம் என்று துடிதுடித்துப் போவார்கள் பெண்கள்.
ஆனால் காலத்தின் மாற்றம்,நாகரீகத்தின் வளர்ச்சி ,கலாசாரம் கடைச்சரக்காகி விட்ட நிலையில் மாராப்பு இல்லாமல் நடந்து போகிறார்கள்.
நடிகைகள் அணிவதைப் போல குட்டைப்பாவாடை அணிகிறார்கள். லோ கட் ஜாக்கெட் என மார்பகம் தெரிய வருகிறார்கள்.
முத்தமிட்டு நடிக்க மாட்டேன் என சொன்ன நடிகைகள் சாக்லேட் சாப்பிடுவதைப் போல ஆண்களின் உதடுகளை சுவைக்கிறார்கள்.
நடிகைகள் நிர்வாணமாக நடிக்கவும் தயாராகி விட்டார்கள்.
ஆடை படத்தில் அமலாபால் நிர்வாணமாக வந்ததைப் போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதைப் பார்த்து சில நடிகைகளுக்கும் அப்படி நடிக்கிற ஆசை வந்திருக்கிறது.
வாய்ப்பில்லாமல் இருக்கிற பிந்து மாதவிக்கும் அப்படி ஒரு ஆசை வந்திருக்கிறது.
“ஆடையைப் போல ஒரு கதை அமைந்தால் அமலாபாலை போல நடிக்கத் தயாராக “இருப்பதாக சொல்லியிருக்கிறார்.
சினிமாவை அத்திவரதர்தான் காப்பாத்தணும்!