7 ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் சர்பத் ( நன்னாரியா?)படத்தில் இசை அமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக ( எவ்வளவு ஆழம் இருக்கும் சார்!) பதித்துள்ளார் இசை அமைப்பாளர் அஜீஸ்.
கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார்.
சூப்பர் சிங்கர் சீசன் 2-வில் குரலால் வசீகரித்த அஜீஸ் தற்போது சினிமாவில் இசை அமைப்பாளராக வசீகரித்து வருகிறார். .
விரைவில் வெளியாக இருக்கிற சர்பத் ( காம்பினேஷன் விஸ்கியா,பிராந்தியா,ஜின்’னா?) படத்தில் 5 பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கி இருக்கிறார்.
அஜீஸுக்கு பள்ளிப் படிப்பின் போதே இசை மீது தீராக்காதல் இருந்ததாம். இண்டிபெண்டண்ட் இசையில் பெரிய நாட்டத்தோடு இருந்துள்ள இவர் பல்வேறு குறும்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இசை ஆல்பங்களாலும் ரசிகர்களை சேர்த்து வைத்துள்ளார். இனி பல பெரும் படங்களில் அஜீஸுன் இசைப் பயணம் தொடரும் என எதிர்பார்க்கலாம்