
“பாருங்கண்ணே ,நம்ம மொட்ட ராஜேந்திரனுக்கு வந்த வாழ்க்கைய.!
லண்டன் பேக் டிராப்.!
பக்கத்தில சொட்ட வாலைக்குட்டியாட்டம் மூணு ஃபாரின் பிஃகர்ஸ்.
சும்மா மப்பும் மந்தாரமும் கொப்பும் கொத்துமா மிதக்குதுங்க. கையில் ஃபாரின் சரக்கு வேற! அனுபவிக்கிறார். தகரத்தில் ஆணியால கீறின மாதிரி குரலை வச்சுக்கிட்டு ….பொறாமையா இருக்குன்னே”
“அவசரப்படாதே,,,கண்ணாடி டேபிள்ல என்ன இருக்கு கவனிச்சியா? ஒத்த வாழைப்பழம். ! டைரக்டர் ரா. கோபி என்னத்தையோ மனசில வச்சிக்கிட்டு சீன் பிடிச்சிருக்கார். செம அயிட்டங்கார ஆளா இருக்காப்ல!”
’’ படத்துக்குப் பேரு நானும் சிங்கள் தான் ரொமாண்டிக் காதல்,காமடி கலந்த படம். கதா நாயகனாக அட்டகத்தி தினேஷ், கதா நாயகியாக தீப்த்தி ஷெட்டி! இதில் மொட்ட ராஜேந்திரன் முக்கியமான காமடி நடிகர். லண்டன் வாழ் தமிழனாக எப்.எம். ஸ்டேசனில் ஆர்.ஜே வாக தனது கதாபாத்திரத்தில் கலக்கி உள்ளாராம்.மிஸ்டர் லவ் என்ற பெயரில் காதலர்களுக்கு டிப்ஸ் கொடுத்து உதவும் லண்டன் லவ் குரு.எப்படி?












