
உலகநாயகன் கமல்ஹாசனின் முக்கியப்படமான ‘தலைவன் இருக்கிறான்’ படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்கப்போவதாக தகவல் கிடைத்திருக்கிறது.
இயக்குநர் ஷங்கரின் இம்சை அரசன் 24 -ம் புலிகேசி கைவிடப்பட்டது. வைகையும் வரண்டது.அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இணைந்து தடை போட்டிருப்பதாக செய்திகள். இதனால் யாரும் வடிவேலுவை கூப்பிடுவதில்லை. அவரும் இந்த அக்டோபருக்குப் பின்னால் நல்ல சேதியுடன் வருவேன் என்பதாக சொல்லி இருக்கிறார்.
இந்த நிலையில்தான் லைகாவுக்கும் வடிவேலுவுக்கும் இருந்த பிரச்னை சமரசத்துக்கு வந்து விட்டதாக சொல்கிறார்கள்.ஆனால் அப்படி எதுவும் இல்லையென்கிறது லைகா தரப்பு.
இந்தியன் 2 படத்துக்காக அடுத்த மாதம் வெளிநாடு போகிறார்கள். இந்தப் படம் முடிந்த பின்னர்தான் அடுத்த படத்தைப் பற்றி யோசிப்பார்கள். அதற்குள் வடிவேலு நடிக்கிறார் என்பதாக வந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
கமல்ஹாசன் அடுத்தபடத்துக்கான நடிகர்கள் தேர்வு பற்றி எதுவுமே சொல்லப்படாத நிலையில் இப்படி ஒருசெய்தியை திட்டமிட்டே பரப்புகிறார்கள் என்கிறார்கள்.குறிப்பாக இரண்டு மலையாளிகள் இந்த வேலையை செய்வதாக சொல்லப்படுகிறது.












