பழி வாங்குதல் என்பது ஆளும் அரசியல் கட்சிகளுக்கு புதிது அல்ல.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்த பழி வாங்குதல் மற்றும் அப்படியே அவர்களுடன் கர்ணன் கவசம் மாதிரி ஒட்டிக் கொண்டு விடும்
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசிய பேச்சு அதிமுக அரசுக்கு எதிராகவே பார்க்கப்பட்டது.
கல் எறிந்தவனை விட்டு விட்டு கை காட்டியவன் மீது நடவடிக்கை எடுப்பதுதான் உலக வழக்கமாகி இருக்கிறது. அதைப்போல விழா நடந்த சாய்ராம் கல்லூரி நிர்வாகத்துக்கு தமிழக அரசின் உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
“எந்த அடிப்படையில் பிகில் விழா நடத்த அனுமதித்தீர்கள் ” என்பது நோட்டீசின் சுருக்கம்.
இதற்கு முன்னர் எத்தனையோ சினிமா நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. அப்போதெல்லாம் சும்மா இருந்தவர்கள் தற்போது சினந்து எழுந்திருக்கிறார்கள். அரசினை கண்டித்துப் பேசிய விஜயுடன் அல்லவா மோதி இருக்க வேண்டும்?