
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி பின்பு நடிகராக வெற்றி பெற்றவர்கள் மணிவண்ணன்,மனோபாலா, சிங்கம்புலி .
அந்த வரிசையில் இப்போது இயக்குநர் மற்றும் நடிகர் குட்டிப்புலி புகழ் சரவண சக்தியும் இணைந்திருக்கிறார். எந்தப்படத்தை இயக்குகிறார் என்பது சஸ்பென்ஸ்.!
தமிழ் சினிமாவில் தண்டாயுதபாணி படத்தின் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் சரவண சக்தி. அதன் பின்பு ரித்தீஷ் உடன் இணைந்து இயக்கிய நாயகன் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு சசிகுமாரின் நடிப்பில் வெளிவந்த குட்டிபுலி படத்தில் இயக்குநர் முத்தையா இவரை நடிகனாக அறிமுகம் செய்தார். அதைத் தொடர்ந்து மருது,சண்டக்கோழி 2 ,கொடிவீரன்,தர்மதுரை போன்ற படங்களில் அசத்தியவர், தற்போது மாமனிதன் ,ரண சிங்கம்,அடுத்த சாட்டை ,வால்ட்டர் என 25 படங்களுக்கும் மேல் நடித்து வருகிறார்.
தமிழில் தற்போது முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து வரும் இவர் விரைவில் தனது அடுத்த படத்தை இயக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார் இதற்காக ஒரு முன்னணி கதாநாயகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது..












